News Channel

ரமளானே வருக

ரமளானே வருக சிறப்பு நிகழ்ச்சி பெரம்பூர் ஐஐசி அரங்கத்தில் நடைபெற்றது. 

மாநிலச் செயலாளர் கே ஜலாலுத்தீன் குர்ஆனிய சமூகத்தைக் கட்டமைப்போம் எனும் தலைப்பில் கருத்துரை நல்கினார். குர்ஆனுடனான தொடர்பின் ஐந்து பரிமாணங்களை அவர் விளக்கினார். 

குர்ஆனை ஓதுவதும், அதனைப் புரிந்து கொள்வதும் குர்ஆனின் படிச் செயல்படுவதும் குர்ஆனின் செய்தியை மக்களுக்கு எடுத்துரைப்பதும் செயல் சான்று வழங்குவதும் வாழ்நாள் முழுவதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்று அவர் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். 

மாற்றத்துக்கான மாதம்தான் ரமளான் என்கிற தலைப்பில் மாநில மகளிர் அணிச் செயலாளர் ஃபாத்திமா ஜலால் பேசினார். ரமளான் மாதம் நம்முடைய எண்ணத்தில், உணர்வில், சொல்லில், செயலில் ஒட்டுமொத்த வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவே வந்தது என்று அவர் குறிப்பிட்டார். 

குர்ஆன்காரர்கள் என்றுமே தோற்றது கிடையாது. வெற்றியின் பக்கம் இட்டுச் செல்வதற்காகத்தான் குர்ஆன் வந்தது. குர்ஆனாகவே வாழ்வதுதான் மிகப் பெரும் அருள்வளம் என்று பெரம்பூர் கிளைத்தலைவர் டி அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் குறிப்பிட்டார்.,