*அதிமுகவின் அமைப்புச் செயலாளருடன் ஜமாஅத் நிர்வாகிகள் சந்தித்து மக்களின் தேர்தல் அறிக்கை வழங்கினர்..*
பிப்ரவரி: 07/2026 சனிக்கிழமை, *முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. M.S.M.ஆனந்தன்* அவர்களை *ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளர் ஜனாப்: S.A.K.ஜெய்லானி* அவர்கள் தலைமையில் சந்தித்து ஜமாஅத் தமிழக கிளை வெளியிட்ட *மக்களின் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது*. தமிழக மக்களின் நலன் சார்ந்து அவர்களின் பொதுவான கோரிக்கைகளை ஜமாத் மக்களின் அறிக்கையாக வெளியிட்டு இருக்கின்றது இதில் இடம் பெற்றுள்ள பொது மக்களின் முக்கிய கோரிக்கைகளை *அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டும் , எதிர்வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அதை நடைமுறைப்படுத்தவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.* தமிழகத்தின் *மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கவும்* வலியுறுத்தப்பட்டது. இந்த சிறப்பு வாய்ந்த சந்திப்பில் ஜமாஅத் மங்கலம் கிளை தலைவர் *ஜனாப்: அப்துல் வதூத்* மங்கலம் ஊழியர் வட்ட பொறுப்பாளர் *ஜனாப்: கலீமுல்லாஹ்* வெல்ஃபேர் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ஜனாப்: *M.முஹம்மது ரிஜ்வான்* பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதலிபாளையம் ஹவுஸிங் யூனிட் ஜமாத் மகளிர் அணி பொறுப்பாளர்கள் *ஜனாபா: S.சக்கிளா* மற்றும் *ஜனாப்:A.ஜரினா* உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.