News Channel

அந்நூர் மதரஸாவில் தர்பியா முகாம் நடைபெற்றது

(08.02.26) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, தாங்கல் பகுதியில் உள்ள அந்நூர் மதரஸாவில் தொடங்கிய தர்பியா முகாம், காலடிப்பேட்டை கிளை மற்றும் மண்ணடி பகுதி இணைந்து நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஜனாப் அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் அவர்களின் திருக்குர்ஆன் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, மாநில மகளிர் அணி செயலாளர் சகோதரி ஃபாத்திமா ஜலால் அவர்கள் “ஜமாஅத் அமைப்பு சட்டமும், தலைமைக்கு கீழ்ப்படிதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து “பன்மைச்சமூகத்தில் முஸ்லிம்களின் பங்கு” என்ற தலைப்பில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்ற, “தலைமுறை – ஓர் விளக்கம்” என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் சகோ. ஐ. ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார். இந்த முகாமில் 40 மகளிரும் 30 ஆண்களும் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.