ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH)-திருப்பூர் மாவட்டம்
மகளிர் அணி சார்பாக 11/12/2023 அன்று மாலை 4 மணிக்கு மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு
ஆசிரியர்கள் சங்கமம் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக
சகோதரி. ஆயிஷா அவர்கள் திருக்குர்ஆன் வசனங்கள் வாசித்தன் மூலம் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து
ஆசிரியர் பெருமக்களையும் சகோதரி.பெனாசிர் நிஷா அவர்கள் வரவேற்றார்
நிகழ்ச்சியின் தலைமை உரை ஐனாப். S.சாகுல்ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தினார்.
(ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - திருப்பூர் கிளைத் தலைவர்)
சிறப்பு விருந்தினராக
ஆசிரியர் M.சலீம் அவர்கள் கலந்து கொண்டார்கள்
Vice president Islamia matric higher secondary school
- covai (All India ideal teachers association (AIITA) - State secretary. சிறப்புரை நிகழ்த்தினார்.
மனித உரிமைகள் தினத்தில்
ஒரு ஆசிரியராக நாம் மாணவர்களுக்கு தர வேண்டிய உரிமைகள் குறித்தும், மனித உரிமைகள் குறித்த எல்லா விஷயங்களையும் ஆசிரியர்கள் கற்று தெரிந்து வைத்திருப்பதும், மிகச்சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்களால் மட்டுமே
உருவாக்க முடியும் என்பதையும், நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்தார்
இறுதியாக மகளிர் அணி பொறுப்பாளர் சகோதரி ஹம்ஸா அவர்களின் நிறைவுரையுடன்
நிகழ்ச்சி இனிதாக நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் அரசு மற்றும் தனியார் பள்ளி
ஆசிரியைகள் 34, நபர்களும்
சகோதர சமயத்து ஆசிரியயைகள்-12 நபர்களும்
தலைமை ஆசிரியைகள்- 5 நபர்களும் கலந்து கொண்டார்கள்.