News Channel

அரங்ககூட்டம்

அண்டை வீட்டார் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய அரங்ககூட்டம் - புதுச்சேரி 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி சார்பாக 30.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.45 மணி வரை அண்டை வீட்டார் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய அரங்ககூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

நிகழ்வின் துவக்கமாக இறைவசனம் GIO சகோதரிகள் வாசித்தார், சகோ. அன்வர் அலி தலைமை ஏற்று வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மண்டல அமைப்பாளர் சகோ. அப்துல் ஹமீது கலந்துகொண்டு அண்டை வீட்டார் பரப்புரையின் நோக்கம் மற்றும் தேவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

புதுச்சேரி மகளிர் அணி சகோதரி. Dr. ஷாஹின் பானு மற்றும் GIO சகோதரி. ரைஹான் தம்ரின் அண்டை வீட்டாரிடம் இருக்க வேண்டியது , இருக்கக் கூடாத பண்பு நலன்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோவை ஹிதாயா இஸ்லாமிய கல்லூரி தாளாளர் மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மௌலவி அவர்கள் தனது சிறப்புரையில், தற்போதைய சூழ்நிலையில் குடும்பங்களின் நிலை குறித்தும், அண்டை வீட்டார் பற்றிய புரிதல்கள் குறித்தும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் எடுத்து வைத்தார்.

அண்டை வீட்டார் பரப்புரையில் ஒரு அங்கமாக செல்பி அரங்கம் அமைக்கப்பட்டது, நிறைவாக சகோ, ஜாகிர் அஹமத் நன்றி கூறினார். 

புதுச்சேரி பகுதியை சார்ந்த 200 நபர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.