News Channel

திருச்சியில் ஊழியர் மற்றும் உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சிப் பட்டறை

*சிறப்பு பயிற்சிப் பட்டறை*

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளை சார்பாக மக்கள் கருத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழிமுறைகள் என்ற மையக் கருத்தில் பயிற்சிப் பட்டறை 10.12.2023 அன்று நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராக மென்பொருள் வல்லுநர், வாழ்க்கைக் கலை பயிற்றுவிப்பாளர் ஜனாப். ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் கலந்துகொண்டார்கள்.

முதல் அமர்வில், தனிநபர் தொடர்பில் நாம் கடைபிடிக்க அணுகுமுறை குறித்து உளவியல் ரீதியான வழிகாட்டுதலை வழங்கினார். இரண்டாம் அமர்வில், சோசியல் மீடியா மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து விளக்கம் அளித்து வழிகாட்டினார்.

இதில் ஜமாஅத் உறுப்பினர்கள் & ஊழியர்கள் 20 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.