அண்டை வீட்டார் பரப்புரை இஜ்திமா
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை அண்டை வீட்டார் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய அறங்ககூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் துவக்கமாக இறைவசனம் மௌலவி இஸ்மாயில் ஃபலாஹி ஓத அதன் தமிழாக்கத்தை பையாஸ் அஹ்மத் வாசித்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நகர தலைவர் சிபகத்துல்லாஹ் அவர்கள் தலைமை ஏற்று வரவேற்புரை ஆற்றினார்.
மாநில அமைப்பு செயலாளர் ஜலாலுத்தீன் அவர்கள் அண்டை வீட்டார் பரப்புரையின் நோக்கம் மற்றும் ஜமாஅத் அறிமுகம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா ஜலால் அவர்கள் அண்டை வீட்டாரிடம் இருக்க வேண்டியது , இருக்கக் கூடாத பண்பு நலன்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மாநில ஆலோசனை குழு உறுப்பினர் படேல் முஹம்மத் யூசுப் அவர்கள் முன்மாதிரி அண்டை வீட்டார் பற்றி குர்ஆன் ஹதீஸ் ஒளியில் எடுத்து வைத்தார்.
நகர மகளிர் அணி அமைப்பாளர் தாசின் நிஷாத் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இறுதியில் அண்டை வீட்டார் பரப்புரையில் ஈடுபட்ட CIO குழந்தைகள் கட்டுரை போட்டி, ஓவிப்போட்டி, பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிறைவாக சல்மா சாஹெபா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை ஜமாத் நகர செயலாளர் முஹம்மத் மாஸ் வழி நடத்தினார்.
நிகழ்ச்சியை ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் ஏற்பாடுகள் செய்தனர்
250 நபர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.