News Channel

திருச்சியில் பெண்கள் மேம்பாட்டு மையம் திறப்பு விழா நடைபெற்றது...

திருச்சி கூனிபஜார் ஆண்கள் மற்றும் பெண்கள் ஊழியர் வட்டம் சார்பாக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விதவை,
 கணவனால் கை விடப்பட்ட கைம்பெண்களின் உயர்விற்காக "மேம்பாட்டு மையம்" 03/12/2023 இன்று கூனிபஜார் பகுதியில் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில்
 JIH திருச்சி கிளை தலைவர் முனைவர். ஹஜ் மொய்தீன் தலைமை ஏற்க,
 ஜனாப். நசீர் அஹமத் - செயலாளர் கூனிபஜார் தார்கான் பள்ளிவாசல்,
 ஜனாப்.M.I.குத்புதீன் - தலைவர், பூக்கடை சங்கம்  திருச்சி
 மற்றும் ஜனாப்.K. அப்பாஸ் நிறுவனர் - பெஸ்ட் பர்னிசர், பீமநகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மௌலவி. ஷேக் முஹம்மது யூசுபி இறைமறையிலிருந்து வசனங்களை ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார். 
கூனிபஜார் ஊழியர் வட்ட பொறுப்பாளர் ஜனாப்.முஹம்மது ஹனிபா அவர்கள் அனைவரையும் வரவேற்க, 
 சிறப்பு விருந்தினராக முனைவர் S.சாகுல் ஹமீத் செயல் அலுவலர் - பேரூராட்சி துறை, திருச்சி மாவட்டம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

"எவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜித் நபவியை இவ்வுலகில் முதல் பெண்கள் மேம்பாட்டு மையமாக நிறுவி அவர்களின் கல்வி மற்றும் அவர்களின் சிந்தனையை விரிவாக்கினார்களோ அதுபோல் இந்த மையமும் செயல்பட வேண்டும்.
" அதற்காக தன்னுடைய புறத்திலிருந்து அனைத்து உதவியும் செய்வதாக வாக்களித்தார்.
 இதுதான் என்னுடைய எண்ணம் மற்றும் துவா என்ற தமது ஆவலை வெளிப்படுத்தினார். 
பின்பு பேசிய முனைவர்.ஹஜ் மொய்தீன் 
இந்த மேம்பாட்டு மையத்தின் நோக்கம் சமுதாயத்தில் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய பெண்களுக்கு கம்யூட்டர் பயிற்சி,
தையல் பயிற்சி, சுய உதவிக்குழு, ஆரி ஒர்க், மெஹந்தி பயிற்சி, கூடை பின்னுதல், பெண்கள் தங்கள் வீட்டில் செய்த மசாலா, துணிமணிகள், கைவினை பொருட்கள் போன்றவற்றை விற்பதற்கு வார சந்தை ஏற்பாடு, குடும்ப நல ஆலோசனை மையம் என வாரத்தில் 7 நாட்களும் இயங்கும் வண்ணம் விரிவுபடுத்த எண்ணியுள்ளோம்.

Pre Marriage Council Centre, டியூஷன் சென்டர், அரசின் நலத்திட்ட உதவி விண்ணப்ப மையம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மையம் என பல பணிகளுக்காக இந்த சேவை மையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, இந்த சமுதாய பெண்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே இந்த மையத்தின் லட்சியம் என சான்று பகிர்ந்தார்.

 முன்னதாக மஹல்லாவில் வசிக்கக்கூடிய 3 எளிய குடும்பத்தினர்களுக்கு ஊழியர் வட்டத்தின் சார்பாக நிதி உதவி அளிக்கப்பட்டது.

 நன்றியுரை ஜனாப்.அப்துல் ரஷீத் அவர்கள் ஆற்ற, நிகழ்வை சிறப்பாக ஜனாப்.முஹம்மது யாசின் அவர்கள் வழிநடத்தினார்.

 இந்த நிகழ்வில் சமுதாயப் புரவலர்கள், சகோதர இஸ்லாமிய இயக்கத்தினர், மஹல்லாவாசிகள், GIO மாணவிகள், ஜமாஅத்தின் ஆண் - பெண் ஊழியர்கள், உறுப்பினர்கள் என 150க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...