News Channel

திருச்சி சத்திய சோலை சார்பாக நடைபெற்ற கட்டுரையை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது

திருச்சி சத்தியச்சோலை இஸ்லாமிய தகவல் மையம் சார்பாக இவ்வாண்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு விழா  28.11.2023 ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஜமால் முகமது கல்லூரி தாளாளர், முதல்வர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் முனைவர்.
அய்யம்பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முதல் பரிசு பெற்றவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் முகமது ஹனீபா. இரண்டாம் பரிசு பெற்றவர் ஜமால் முகமது கல்லூரி மாணவி ஸ்ரீ பாரதி
மூன்றாம் பரிசு பெற்றவர் மூகாம்பிகை கல்லூரி மாணவி
சுகஸ்ரீயா மற்றும் மூகாம்பிகை கல்லூரி மாணவர் நவ்ஷாத் சிறப்பு பரிசு பெற்றனர்.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் முனைவர்.ஹஜ் மொய்தீன் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அறிவுரை நல்கினார்.