News Channel

அண்டை வீட்டார் உரிமைகள்

இறைவனின் மாபெரும் அருளால் அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரையின் ஒரு நிகழ்வாக நாச்சியார் கோயிலில் அரங்கு கூட்டம் சிறப்பாக நடந்தது.

நாச்சியார் கோயில் ஜாமியா மஸ்ஜித் இமாம் ஹாஃபிழ் முஹம்மது சலீம் ரியாஜி அவர்களின் குர்ஆன் விரிவுரையுடன் துவங்கியது.

கும்பகோணம் அல்அமீன் பள்ளி முதல்வர் சகோதரி மரியா சோபியா மாத்தூர், ஜெயங்கொண்ட மாதா பள்ளி முதல்வர் சகோதரி மரியா ஆண்டனி, நாச்சியார்கோவில் கிரசென்ட் ஸ்கூல் & இஸ்மாயில் பள்ளிவாசல் மேனஜிங் டிரஸ்டி ஜனாப் முபாரக் அலி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வின் மையக் கருத்தை மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் அண்டை வீட்டாரை குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

இதில் 250 க்கும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த தலைப்பு இன்றைய காலத்திற்கு தேவையானது என்று உணரப்பட்டது.

நிகழ்வின் ஒரு பகுதியாக செல்ஃபி பாயின்ட் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது அதில் வந்திருந்த அனைவரும் தங்களை செல்ஃபி எடுத்து கொண்டார்கள்.

பள்ளிவாசல் தலைவர்கள் உள்ளூர் முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தார்கள்

ஜமாஅத்தே இஸ்லாமி உறுப்பினர்களும் ஊழியர்கள் ஆண்களும் பெண்களும் மிகவும் சிறப்பாக தங்களின் பங்களிப்பை அளித்தார்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே...

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
நாச்சியார் கோயில் திருநாரையூர்.