News Channel

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது

*மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி*

22.11.2023 அன்று மாலை 5 மணிக்கு இலாஹி பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், பாலக்கரை & இலாஹி வட்டம் சார்பில் நடைபெற்றது. 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளை தலைவர் முனைவர். ஹஜ் மொய்தீன் தலைமை தாங்கினார். இலாஹி பள்ளிவாசல் செயலாளர் ஜனாப். காஜா மைதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாற்றுதிறனாளிகள் 40 பேருக்கு பிளாஸ்டிக் பொருட்கள், போர்வைகள் மற்றும் 1 மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

மக்கள் சேவைப் பொறுப்பாளர் ஜனாப். நவாஸ் கான் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினார். Blind Asociation தமிழக ஒருங்கிணைப்பாளர் திரு. கலியமூர்த்தி, விழியிழந்தோர் பாதுகாவலன் ஜனாப். இப்ராஹீம் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.