News Channel

மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் - நாடு தழுவிய பரப்புரை

கோட்டை யேந்தல் பகுதியில் 
"மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" நாடு தழுவிய பரப்புரை நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் CIO - children islamic organisation சார்பாக நடைபெற்று வரும் பரப்புரையின் ஒரு பகுதியாக இராமநாதபுரம், சிக்கல் அருகில் உள்ள கோட்டை யேந்தல் பகுதியில் 
16.07.25 புதன்கிழமை அன்று மக்தப் மதரஸா மாணவ மாணவிகள் சார்பாக மரக்கன்று நடுதல் ஓவியம் வரைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதில் 
2 மாணவர்களும் 
2 மாணவிகளும் கலந்துகொண்டார்கள். 

கலந்துகொண்ட மாணவ மாணவிகளின் பெயர்கள் பின்வருமாறு 
1-M.ஹாரித் 
2.ரகீப் 
3.K.கிபாயாஅசீம் 
4.K.கின்ஸாபர்வா 

ஓவியம் வரைந்த மாணவர்
M.ஹாரித் 
ஓவியம் வரைந்த மாணவி
K.கிபாயா அசீம் 

மேலும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும், கோட்டையந்தல் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் ஷாஜகான் அவர்கள் பள்ளிவாசல் பெயர் பலகையில் மரம் வரைந்து மரத்தினால் ஏற்றப்படும் நன்மைகள் குறித்த விளக்கத்தை மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்.

- JIH- இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம்