News Channel

தகைசால் தமிழர் விருதிற்கு தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்காக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.காதர் மொய்தீன் அவர்களை  திருச்சி ஜமாஅத்தே  இஸ்லாமி ஹிந்த்(JIH) குழு இன்று 16.07.25 அவர்களின் இல்லத்தில் சந்தித்து தகைசால் தமிழர் விருதிற்கு தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்காக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 

இச்சந்திப்பின் போது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ் மாநிலத் தலைவர்  மௌலானா மௌலவி  A.முஹம்மது ஹனிபா மன்பயீ அவர்கள் தேசிய தலைவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் Radiance பத்திரிக்கையில்  அவர் குறித்து எழுதிய கட்டுரையும்  வழங்கப்பட்டது.