குராயூரில்
"மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" நாடு தழுவிய பரப்புரை நடைபெற்றது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் CIO - children islamic organisation சார்பாக நடைபெற்று வரும் பரப்புரையின் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் குராயூரில்
15.07.25 செவ்வாய்க்கிழமை அன்று
🌲 மரம் நடுதல் நிகழ்வும்
🎤 மாணவ- மாணவிகளில் உரை நிகழ்த்தினார்கள்
மாணவி A. சபிகா
மாணவி T. ஜாஸ்மீன்
மாணவி A. சுமையா
ஆகிய மூன்று பேரும் இயற்கை வளங்களை குறித்தும் மரங்கள் வளர்ப்பதை குறித்தும் மரங்கள் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை குறித்தும் மனித வாழ்விற்கு மரங்கள் எத்தனை உறுதுணையாக இருக்கின்றது மேலும் பறவைகளுக்கு எந்த அளவுக்கு பயன் தருகிறது நீர் பூமிக்கு வருவதற்கு மரங்கள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கின்றது போன்ற செய்திகளை மிக அழகிய முறையிலேயே மாணவிகள் உரை நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து ஐந்து 🌲 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும், 16.07.25 புதன்கிழமை அன்று குராயூர் உள்ள துவக்கப்பள்ளி மாணவ-மாணவிகளை சந்தித்து இயற்கை வளங்களை குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் 50 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டு மாணவர்களும் ஒரு மாணவியும் தல ஒரு மரக்கன்று நடப்பட்டன.
நிகழ்வின் இறுதியாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் மதுரை புறநகர வட்டப் பொறுப்பாளர் மௌலவி அப்துல் கரீம் இன்ஆமி அவர்கள் இயற்கை குறித்தும், இயற்கையின் அவசியத்தை குறித்தும், அதனை பாதுகாப்பதை குறித்தும் மாணவ மாணவியரிடத்தில் உரை நிகழ்த்தினார்.
- JIH- இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம்