ஜாமஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் குழந்தைகள் இஸ்லாமிய அமைப்பு (CIO) நடத்திவரும் "மண்ணில் கைகள், இந்தியாவில் இதயங்கள்" எனும் பரப்புரையின் கீழ் நாடு முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருநாகேஸ்வரம் தேப்பெருமாநல்லூரில் ஜூலை 12, 2025 (சனிக்கிழமை) மாலை 4:30 மணிக்கு மரம் நடும் விழா நடைபெற்றது.
விழாவின் சிறப்பம்சங்கள்:
ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் (ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர்) தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.
சகோதரர் ஹாஜா மாலிக் (ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருநாகேஸ்வரம் வட்டம்) நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
திருக்குர்ஆன் வசனம் மற்றும் விளக்க உரை சகோதரி ஜன்னத்துல் பிர்தௌஸ் முன்வைக்கப்பட்டது.
குழந்தைகளின் சிறப்புரைகள்:
சஃப்ரின் பானு – குர்ஆனில் மரத்தின் முக்கியத்துவம்.
ஹஸனா ஃபாத்திமா – CIO வின் ஒரு மாதம் நீடிக்கும் பரப்புரை.
தஸ்மீன் பேகம் – பனை மரத்தின் பலன்கள்.
சுஹைனா & ரிஃபானா – மரம் வளர்ப்பின் நன்மைகள்.
வாழ்துரைகள் மற்றும் சிறப்புரைகள்:
சகோதரி ரஹ்மத்துல் நிஷா (CIO மாநில தலைவர்) பரப்புரையின் நோக்கத்தை விளக்கினார்.
ஜனாப் எம்.என். ரஃபி (அல் அமீன் பள்ளி தாளாளர்) ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சிறப்பான பணிகளைப் பாராட்டினார்.
ஜனாப் பி.எஸ். பஷீர் அகமது (சீமாட்டி குழுமத் தலைவர்) கூடுதல் மரக்கன்றுகள் வழங்க உதவுவதாக உறுதியளித்தார்.
எம். அன்வர் பாட்சா (திருநாகேஸ்வரம் நாட்டாமை) ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் 75 ஆண்டுகால சேவையைப் பாராட்டினார்.
திரு சக்ரியாஸ் (தீபம் டிரஸ்ட்) மரங்களின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
ஜனாப் முஹம்மது யூனுஸ் (முன்னாள் கும்பகோணம் கிளை தலைவர்) குழந்தைகள் மூலம் சூழல் பாதுகாப்பு பணியைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
முன்னிலை வகித்தவர்கள்:
எஸ்.கே. குமரவேல் (முன்னாள் ஊராட்சி தலைவர்).
லயன் ராதாகிருஷ்ணன் (லயன்ஸ் கிளப் தலைவர்).
திரு தாமரைச்செல்வம் (பேரூராட்சி பெருந்தலைவர்).
ஜனாப் ஹாஜா மைதீன் (லிப்ட் குழுமத் தலைவர்).
சிறப்புகள்:
100 மரக்கன்றுகள் குழந்தைகளால் நடப்பட்டன.
150க்கும் மேற்பட்டோர் (குழந்தைகள், பெரியோர்கள், தாய்மார்கள்) கலந்து கொண்டனர்.
அண்ணல் நபி (ஸல்) ஆளுமை புத்தகம் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை சு. அப்துல் ரஹ்மான், ஹாஜா மாலிக் மற்றும் அக்பர் அலி ஒருங்கிணைத்தனர்.
"புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!"
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
திருநாகேஸ்வரம் CIO குழு.