News Channel

அதிகாலை அமர்வுகள்

அதிகாலை அமர்வுகள் JIHமதுரை 6.04.25  ஞாயிற்று கிழமை முனிச்சாலை JIH அலுவலகத்தில் நடைபெற்றது.

ரமலானுக்கு பின் நாம் என்கிற தலைப்பில் சகோ ஜனாப். முனவர் சுல்தான் அவர்கள் உரையாற்றினார் அவர் கூறுகையில், ரமலானுக்கு பின் அவசியம் பின்பற்ற வேண்டிய அம்சங்கள்
1. பஜர் தொழுகை இமாம் ஜமாத்தோடு தொழுவது
2. பொய், புறம் போன்ற குணங்களில் இருந்து ரமலானை போன்றே மற்ற நாட்களிலும்விலகி இருப்பது
3. குர்ஆன் ஓதுவது பொருள் உணர்ந்து படிப்பது
4. ததப்பருல் குர்ஆன் (குர்ஆனை சிந்தித்து ஆழமாக கருத்துன்றி புரிந்து கொள்வது) போன்ற தன்மைகள் ரமலானுக்கு பின் அவசியம் தொடர வேண்டிய அம்சங்கள் என உரையில் கூறினார்.

அல்ஹம்துலில்லாஹ், ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.