News Channel

ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

  • திருப்பூர்  ஜெய்வாபாய்  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  முப்பெரும் விழா 
கடந்த 19.06.2025 காலை 10 மணியளவில் நடைபெற்றது. 
இவ்விழாவில் மணிப்பால் ஸ்டோர் உரிமையாளர் அவர்கள் மாணவிகளின் உயர்கல்விக்காக  25 மாணவிகளுக்கு 
ரூபாய் பத்தாயிரம் வீதம் நன்கோடை வழங்கினார்கள்.  மேலும் 12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் முதல் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த  மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கினார்கள்.மேலும்  பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மிகச் சிறப்பாக 
மாணவிகளின் கல்விக்காக சேவையாற்றி வருகிறீர்கள் என்று வாழ்த்தி அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்கள்.  இந் நிகழ்வில்  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் உறுப்பினர்  ஷகிலா பானு அவர்களுக்கும் 
மணிபால் ஸ்டோர் உரிமையாளர்கள்  பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் என்ற வகையில் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்வு மிகச் சிறந்த நிகழ்வாக அமைந்திருந்தது.