''போதை ஒழிப்பு பிரச்சாரம்''
மக்கள் கருத்தை இஸ்லாத்திற்கு சாதகமாக மாற்றி அமைக்கும் பணிகளில் இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் சார்பாக ஒரு அம்சத்தில் பணிகளை முடிவு செய்து மாதந்தோறும் மக்கள் கருத்தை மாற்றி அமைக்கக்கூடிய பணிகளை முன்னெடுத்து வரப்படுகிறது.
அவ்வகையில் ஜூன் மாதம் 26 ஆம் தேதி போதை ஒழிப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டில் நிலவக்கூடிய போதை மற்றும் மது சார்ந்த பல தீமைகள் இன்றைக்கு உலகெங்கும் மலிந்து கிடப்பதை நாம் பார்க்கின்றோம்.
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் போதை சம்பந்தமான பல்வேறு நிலைகளை அவர்கள் பயன்படுத்துவதும் அதற்கு அடிமையாகி வாழ்வை இழந்து படுகுழியில் விழ்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகின்றது.
இச்சூல் நிலையில் ஜூன் 26 ஆம் தேதி போதை ஒழிப்பு தினத்தை மையமாக வைத்து பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது என இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் சார்பாக முடிவெடுக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக கடந்த 24.6.2025 செவ்வாய்க்கிழமை மாலை தெருமுனைப் பிரச்சாரம் இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் பகுதியில் உள்ள மதினா நகரில் மாலை 5:30 மணி அளவில் நடைபெற்றது.
இதில் மறவாய்க்குடி ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் ஷேக் முஹம்மது ஆலிம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
மதினா நகரில் உள்ள மக்கள் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் என மொத்தம் 55 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.