SIO மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
கடந்த 22:6: 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு ( SIO) சார்பாக சிறப்பு நிகழ்ச்சிக்காக சகோ ; அப்துல் அஜீஸ் தலைமையில் அணைக்கரைப்பட்டி க்கு வருகை புரிந்தனர். வருகை புரிந்த மாணவர்களை வரவேற்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளரும், மதுரை இஸ்லாமிக் சென்டர் செயலாளருமான
மௌலானா; முகைதீன் குட்டி உமர் அவர்கள் மேற்பார்வையாளராக இருந்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளரும், மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச் செயலாளருமான ஜனாப் : கா. நஜீர் ஹுஸைன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.
வருகை புரிந்த மாணவர்களுக்கு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர் மற்றும் ஊழியர்கள்
இமாம்; சர்தார் பாஷா
ஆலிம் ; சேக் முஹம்மது- தாஃவதி
மௌலவி; அப்துல் மாலிக் - ஸலாமி
ஆகியோர் வழிகாட்டியாக இருந்து மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை அமைத்துக் கொடுத்தார்கள்.
இச்சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது . வருகை புரிந்த அனைவருக்கும் நிகழ்ச்சியின் மூலம் அனுபவங்கள் மற்றும் தாக்கங்களை பகிர்ந்து கொண்டார்கள். தங்களுடைய வாழ்வில் இப்படி ஒரு அனுபவம் எங்களுக்கு கிடைத்ததில்லை, நாங்கள் வேறு வகையாக நினைத்து வந்தோம் எங்களுக்கு இங்கு மிகச்சிறப்பாக நிகழ்ச்சி அமைந்தது. வழிகாட்டியாக வந்தவர்களும் எங்களுக்கு நல்லதொரு பயிற்சியாளராக திகழ்ந்தார்கள். பல அனுபவங்கள் எங்களுக்கு கிடைத்தது. என்பது போன்ற அனுபவங்களை நிகழ்ச்சியின் இறுதியில் வருகை புரிந்த மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.
மிகச் சிறப்பான நிலையில் இந்நிகழ்ச்சி நடந்து நிறைவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்.