News Channel

தியாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி - கடலூர்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - கடலூர் சார்பாக தியாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 14-06-25 அன்று நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு கடலூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளர் சகோ. M. அப்துல் ஹமீது தலைமை தாங்கினார், கடலூர் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் சகோ. I. அஸ்மா நஸ்ருத்தீன் முன்னிலை வகித்தார்,

நிகழ்ச்சியின் தொடக்கமாக மௌலவி. அப்துல்ல்லாஹ் ஸலாமி அவர்கள் கிராத் ஓதினார்கள், அதனை தொடர்ந்து வட்ட பொறுப்பாளர் சகோ. J நிசார் அஹ்மத் அனைவரையும் வரவேற்றார், மஞ்சை நகர் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் Rtn. MPHF.PP திரு சபா ஆனந்த குமார் அவர்கள் சிறப்பான முறையில் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அதனை தொடர்ந்து புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் நா. இளங்கோ மிக சிறப்பான முறையில் இஸ்லாமிய சிறப்பு அம்சங்கள், சமூக நல்லிணக்கம் குறித்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த, வாழ்ந்து காட்டிய வாழ்வியல் முறைகள் குறித்தும், மேலும் இன்று நாட்டில் நடைபெறும் அநீதிகள் குறித்தும் மற்றும் மத நல்லிணக்கத்தின் தேவைகள் குறித்தும் மிக சிறப்பாக உரையாற்றினார்கள்,

இதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் சமரசம் இதழ் பொறுப்பாசிரியர் சகோ. V S அமீன் அவர்கள் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும்,  தியாக பெருநாள் தருகின்ற செய்தி குறித்தும், சமூகத்தில் சமீபகாலங்களில் நடைபெறும் அநீதிகள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்கள், அதற்கான இஸ்லாமிய தீர்வுகள், இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் வாழ்விலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகள் குறித்தும் மிக விளக்கமாக உரையாற்றினார்கள், இறுதியாக சகோ. மாலிக் பாஷா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.   

நிகழ்ச்சியில் கடலூரை சார்ந்த சகோதர சமுதாய மக்கள் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆண்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர், நிகழ்ச்சி ஏற்பாடுகளை கடலூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.