News Channel

கடையநல்லூர் தியாகத் திருநாள் சந்திப்பு புத்தக வெளியீடு



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

14/12/1446 (11/06/2025) புதன்கிழமை மாலை 4 மணி கடையநல்லூர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை, 
இஸ்லாமிய இலக்கிய கழகம் இணைந்து தியாகத் திருநாள் சந்திப்பு,
வக்ஃபு திருத்தச் சட்டம் ஒரு பார்வை:நூல் அறிமுகம், 
ஹஜ்ஜின் நாயகர்: நூல் வெளியீடு என முப்பெரும் நிகழ்ச்சி கடையநல்லூர் ரியாளுஸ் ஸாலிஹாத் மகளிர் அரபிக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் துவக்கமாக மௌலவி சம்சுதீன் ஃபைஜி  திருமறை வசனங்கள் ஓதினார்கள்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் செயலாளர் நல்லாசிரியர் செய்யது மசூது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

JIH கிளைத் தலைவர் பீர் முஹம்மது அவர்கள் துவக்கவரை நிகழ்த்தினார்.

சென்னை கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி முதல்வர் PS செய்யது மசூது ஜமாலி மற்றும் இஸ்லாமிய இலக்கிய கழகத் தலைவர் எழுத்தாளர் சேயன் இப்ராஹீம் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

பின்பு நூல்கள் வெளியிடப்பட்டது.

சமரசம் இதழ் பொறுப்பாசிரியர் வி எஸ் முஹம்மது அமீன் ஏற்புரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியை JIH ஊழியர்கள் ஜனாப் முஹம்மது ரிழ்வான் வழி நடத்தினார்.

ஆண்கள் பெண்கள் சுமார் 140 பேர் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் தேநீர் சுவீட் பாக்ஸ் வழங்கப்பட்டது.

எல்லாப் புகழும் இளைவனுக்கே.