News Channel

குழந்தைகள் பாதுகாப்பு தினம்

ஜுன் 4 ம் தேதி "ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் பாதுகாப்பு தினம்" அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது 

ஒவ்வொரு முக்கிய நாட்களிலும் இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் சார்பாக தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு  வருகின்றன. 

அவ்வகையில் ஜூன் 4-ஆம் தேதி குழந்தைகள் பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 
இந்த தினத்தில் குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடல்கள் செய்வது, இனிப்புகள் வழங்குவது அவர்களுக்கான அறிவுரை புகட்டுவது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 பள்ளிக்கூடங்களுக்கு சென்று தலைமை ஆசிரியர்களை சந்தித்து குழந்தைகள் பாதுகாப்பு தினத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் அவர்களிடத்தில் எடுத்து கூறி அனுமதி கிடைத்தால் அனைத்து பள்ளி மாணவ - மாணவிகள் அமர வைத்து அவர்களுக்கான சிறிய வழிகாட்டுதல் வழங்குவதும் நடந்து வருகிறது. 

பெற்றோர்களை சந்தித்து குழந்தைகளுடைய வளர்ப்பை குறித்தும் குழந்தையினுடைய எதிர்காலத்தை குறித்தும் பாதுகாப்பையும் குறித்தும் பேசப்பட்டு வருகின்றனர். 
இந்த ஆண்டும் ஜூன் 4-ம் தேதி குழந்தைகள் பாதுகாப்பு தினம் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தன. 

அவ்வகையில் 
கோடாங்கிபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளை சந்தித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிமும் உரையாடல் செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
 
குராயூர் பகுதியில் பள்ளிக்கூடத்துக்கு சென்று மாணவ மாணவிகளை சந்தித்து உரையாடலும் நடத்தப்பட்டது இனிப்புகள் வழங்கப்பட்டன

  மக்கா நகரில் பள்ளிக்கூட மாணவ மாணவிகளை சந்தித்து இனிப்புகள் வழங்கி இந்த நாளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறப்பட்டது. மற்ற பகுதிகளிலும் இப்பணி சிறப்பாக நடைபெற்றது.