News Channel

கலந்துரையாடல் நிகழ்ச்சி

மே 21,2025, திருச்சி சத்தியச்சோலையில் வக்ஃப் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


துவக்கமாக Er.K.ஜலாலுதீன் திருமறை வசனங்களை ஓதினார். பேரா.அமானுல்லா 
வந்தவர்களை வரவேற்று 
சத்தியசோலையை அறிமுகப்படுத்தினார்.

முனைவர்.ஹஜ் மொஹிதீன் அவர்கள் இந்த கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கி சிறப்புரை நிகழ்த்தினார். 

திருச்சியில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த பொறுப்பாளர்கள் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றது, வக்ஃப் குறித்த புரிதலை மேம்படுத்தவும், சமூக நல்லிணக்கத்தை வளர்க்கவும் ஒரு நம்பிக்கையான முன்னெடுப்பாக அமைந்தது. அவர்களின் பங்களிப்பு எதிர்காலத்தில் மேலும் பயனுள்ள ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது.

நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் IFT வெளியிட்டுள்ள வக்ஃப் திருத்தச்சட்டம் ஒரு விரிவான பார்வை என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) திருச்சி கிளையின் விரிவாக்கப் பொறுப்பாளர் ஜனாப் சிராஜூதீன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவெறும்பூர் வட்ட ஊழியர்கள் இந்த நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.