News Channel

சுற்றுலா மற்றும் கல்வி நிகழ்ச்சி

முதல் நாள் பயணம் (12-05-2025)

கும்பகோணம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கிளையின் சார்பாக, கிளைத் தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் தலைமையில் 20 உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கேரள மாநிலத்தின் தேக்கடி சுற்றுலாவிற்குப் புறப்பட்டனர். ஜமாத்தின் வழிகாட்டுதலின்படி இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 4:00 மணியளவில் பயணத் துவா ஓதப்பட்டு, பயணம் தொடங்கியது.
திருச்சியை அடுத்து இனாம் குளத்தூர் பைபாஸில் உள்ள பள்ளிவாசலில் லுகர் மற்றும் அஸர் தொழுகைகளை நிறைவேற்றினோம். பின்னர் திண்டுக்கல் 8:10 மணியளவில் சென்றடைந்தோம். அங்குள்ள பள்ளிவாசலில் மகரிப் மற்றும் இஷா தொழுகைகளைத் தொழுதுவிட்டு, இரவு உணவு கொண்டோம். பின்னர் நேரடியாக தேக்கடி நோக்கிப் பயணித்தோம். 12:30 மணியளவில் ஹோட்டலில் வந்து சேர்ந்தோம்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் (13-05-2025)

காலை 5:15 மணியளவில் பஜர் தொழுகைக்கு எழுந்து, தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றினோம். பின்னர் கிளைத் தலைவர் அப்துல் கலாம் ஆசாத் அவர்களால் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. காலை 6:00 மணியளவில் கிராத் ஓதி நிகழ்ச்சி துவங்கியது.
முதல் உரை: அய்யம்பேட்டை முகமது நாசர் புகாரி அவர்கள் "உள்ளங்களைத் தூய்மை செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் தூய்மையின் முக்கியத்துவம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
இரண்டாம் உரை: கிளைத் தலைவர் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் "இறைவனின் அன்பைப் பெறுவது எப்படி?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
கலந்துரையாடல்: மாவட்ட அமைப்பாளர் ஜனாப் முகமது யூனுஸ் அவர்களின் தலைமையில் "அமைப்பைக் கொண்டு செல்வது எப்படி?" என்ற கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் நான்கு பேச்சாளர்கள் பங்கேற்றனர்:
  1. ஜனாப் சாதிக் பாட்ஷா - "பெண்களிடத்தில் அமைப்பைக் கொண்டு செல்வது எப்படி?"
  2. ஜனாப் சு. அப்துர் ரஹ்மான் - "இளைஞர்களிடத்தில் அமைப்பைக் கொண்டு செல்வது எப்படி?"
  3. ஜனாப் ரிபாயுதின் - "மாணவர்களிடத்தில் அமைப்பைக் கொண்டு செல்வது எப்படி?"
  4. ஜனாப் ஹாஜா மாலிக் - "பிரமுகர்களிடத்தில் அமைப்பைக் கொண்டு செல்வது எப்படி?"
நிகழ்ச்சிக்கு இடையில் தேநீர் வழங்கப்பட்டது. காலை 8:00 மணியளவில் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. பின்னர் ஸ்விம்மிங் குளத்தில் சிறிது நேரம் பொழுது போக்கினோம். 8:30 மணியளவில் காலை உணவு கொண்டோம்.
ஜீப் சஃபாரி: 9:30 மணியளவில் ஜீப் சஃபாரி நடந்தது. இயற்கையின் அழகைக் கண்டு மகிழ்ந்தோம். திரும்பும் வழியில் தேக்கடி பெரிய பள்ளிவாசலில் லுகர் மற்றும் அஸர் தொழுகைகளை நிறைவேற்றினோம். பின்னர் ஹோட்டலில் உணவு கொண்டு, சிறிது ஓய்வெடுத்தோம்.
மாலை நிகழ்ச்சிகள்:
  • 3:30 மணியளவில் ரோஸ் பார்க்கில் சுற்றிப் பார்த்தோம்.
  • 5:30 மணியளவில் கேரளாவின் சிறப்பு களரிக் கலை நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தோம்.
  • 7:00 மணியளவில் ஹோட்டலுக்குத் திரும்பும் வழியில் தேக்கடி பெரிய பள்ளிவாசலில் மகரிப் மற்றும் இஷா தொழுகைகளைத் தொழுதோம். இரவு உணவு கொண்டு உறங்கினோம்.

மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் (14-05-2025)

காலை 5:15 மணியளவில் பஜர் தொழுகை நிறைவேற்றினோம். பின்னர் கிராத் ஓதி நிகழ்ச்சி தொடங்கியது.
முதல் உரை: கிளைத் தலைவர் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் "சேர்ந்திருப்பதும் அல்லாஹ்வின் உதவியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இரண்டாம் உரை: அய்யம்பேட்டை முகமது நாசர் புகாரி அவர்கள் "இறைவனின் நெருக்கத்தைப் பெறுவதற்கான வழிகள்" பற்றி விளக்கினார்.
சிறப்பு உரை: கோயமுத்தூரிலிருந்து வந்த மௌலானா முஹம்மது இஸ்மாயில் இம்தாதி (ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த், மனித வள மேம்பாட்டுத் துறை) அவர்கள் "நம் குடும்பங்களில் இஸ்லாமும் இயக்கமும்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இஸ்லாமிய குடும்பங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மார்க்க அடிப்படையில் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
8:30 மணியளவில் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. 8:45 மணியளவில் காலை உணவு கொண்டோம்.
போட்டிங்: 9:00 மணியளவில் போட்டிங் பயணம் தொடங்கியது. இயற்கையின் அழகைக் கண்டு மகிழ்ந்தோம். திரும்பும் வழியில் லுகர் மற்றும் அஸர் தொழுகைகளை நிறைவேற்றினோம். சிறியளவு ஷாப்பிங் செய்துவிட்டு, 4:00 மணியளவில் கும்பகோணத்திற்குப் புறப்பட்டோம். 12:30 மணியளவில் பாதுகாப்பாக கும்பகோணம் வந்து சேர்ந்தோம்.

முடிவுரை

இந்த சுற்றுலா மற்றும் கல்வி நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய அல்லாஹ்வுக்கு எல்லாப் புகழும். கிளைத் தலைவர் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் தலைமையிலும், ஹாஜா மாலிக் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பிலும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அனைவருக்கும் நன்றி!