News Channel

மணப்பாறை திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு புத்தகங்கள் பரிசளிக்கும் நிகழ்வு புத்தகங்கள் பரிசளிக்கும் நிகழ்வு

மே 1 2025 
 மணப்பாறை பகுதியில் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.
 விழாவில் சிறப்புரையாற்ற திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் தோழியர் மதிவதனி அவர்கள் கலந்து கொண்டார்கள்.
 பொதுக்கூட்டத்தில் ஒன்றிய அரசின் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்தும் மேலும் சிறுபான்மையினர் நலன்களின் பாதுகாப்பு குறித்து மேலும் சிறுபான்மையினர் சுரண்டப்படுவதை குறித்தும் மதிவதனி அவர்கள் பேசினார்கள். விழாவில் மணப்பாறை பகுதியை சார்ந்த ஜமா அத்தே இஸ்லாமிக்ஹிந்த் மணப்பாறை கிளையின் தலைவர் ஜபருல்லா செயலாளர் காதர் பாட்ஷா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் பதிப்பித்த புத்தகங்களை விழாவின் விருந்தினர்களுக்கு வழங்கினார்கள்.
 பொதுக் கூட்டத்திற்கு மணப்பாறை பகுதியைச் சார்ந்த அனைத்துக் கட்சியைச் சார்ந்த மற்றும் கட்சி சாரா முக்கிய நபர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
 மணப்பாறை மக்களுக்கு இடையேயான இணக்கமான உறவுகளும் மேலும் மணப்பாறை பகுதியிலான ஆளுமைகளுடன் உறவு மேம்படுத்துவது குறித்தும் விழாவில் சிறப்பு முயற்சி எடுக்கப்பட்டது. பொதுக் கூட்டமானது இரவு ஒன்பது முப்பது மணி அளவில் எல்லாம் வல்ல இறை அருளால் இனிதே நிறைவுற்றது.