News Channel

திராவிட கழக தோழர்களுடன் ஒரு சந்திப்பு

மணப்பாறை தக்வா பள்ளிவாசல் கிளையில் கடந்த 8 3 2025 செவ்வாய் அன்று திராவிட கழகத் தோழர்கள் வருகை தந்து தங்களுக்குள் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்திக் கொண்டு தோழர் மதிவதனி கூட்டம் வரும்  மே மாதத்தில் நடந்த ஆதரவு கேட்டும் நம்முடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் வைத்தனர். நமது தரப்பில் மாதம் ஒருமுறை பொதுவாக உள்ள பிரச்சனைகள் சமூக நீதி, சகோதரத்துவம் ஒழுக்கம் சார்ந்த முரண்படாத கருத்துக்களை தளம் அமைத்து கலந்துரையாடல் நடத்துவது என்று முடிவு முடிவு செய்யப்பட்டது.
 நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் திருச்சி மாவட்ட செயலாளர் மகாமுனி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கிலி முத்து கனகராஜ் துணைச் செயலாளர் ராஜசேகரன் மணப்பாறை திராவிட நகர தலைவர் கிம்ஸ் ரமேஷ் வையம்பட்டி சக்திவேல் மணப்பாறை பகுத்தறிவாளர்கள் துரை அழகிரி அரசு வழக்கறிஞர்,தோழர் துரை காசிநாதன் திமுக மாநில பேச்சாளர்,கவிஞர் பசுலுதின்,மணிவண்ணன் ஆகியோர் அமர்ந்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
 அவர்களுக்கு சமரசம் இதழ் அறிமுகப்படுத்தப்பட்டது மேலும்  டாக்டர் KVS அவர்களின் அறிவோம் ஹிஜாப் புத்தகங்கள் அனைவருக்கும் நினைவு பரிசாக வழங்கப்பட்டன.