மணப்பாறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 06-0402025 மாலை 7 மணி அளவில் மணப்பாறையில் உள்ள தக்வா பள்ளியில் சிறப்பாக நடந்தது நிகழ்ச்சியின் துவக்கமாக திருக்குர்ஆன் வசனங்கள் ஓதப்பட்டு மணப்பாறை அமிரே மக்காமி ஜனாப் ஜபருல்லா வரவேற்புடன் திருச்சி மண்டல பொறுப்பாளர் ஜனாப் சையத் முஹமது அவர்களின் தலைமை உரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களான மணப்பாறை நகர்மன்ற தலைவர் திரு கீதா மைக்கேல்ராஜ் மணப்பாறை லூர்து மாதா அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தையும் மறை மாவட்ட முதல்வருமான அருட்திரு தாமஸ் ஞானத் துறை அவர்களும் மணப்பாறை வேப்பிலை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அறங்காவலர் மதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் மற்றும் அதிமுக நகரச் செயலாளர் பவுன் ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தமிழ்நாடு ஜமாஅத்தே இஸ்லாமிக் ஹிந்தின் மாநில செயலாளர் ஜனாப் சிக்கந்தர் ஈகை திருநாள் சிறப்பு பற்றியும் ஈகை என்ற பண்பு அல்லாஹ்வால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு அருட்கொடை என்றும் நோன்பின் மூலமாக இறைவன் தன் அடியார்களுக்கு தரும் பயிற்சிகள் என்பதையும் பட்டியலிட்டு அழகான விளக்கம் தந்தார்கள் இறுதியாக சகோதரர் காதர் பாட்ஷா நன்றி கூறி இனிதே நிகழ்ச்சி விருந்துடன் முடிவடைந்தது சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் 65 பேர்களும் கலந்து கொண்டார்கள்.