News Channel

இதயங்களை இணைக்கும் பெருநாள் சந்திப்பு (ஈத் மிலன்) நிகழ்ச்சி - அதிராம்பட்டினம்

இறையருளால் கடந்த 06/04/25 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) மற்றும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பாக "இதயங்களை இணைக்கும் பெருநாள் சந்திப்பு" (ஈத் மிலன்) நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் SIOவின் முன்னாள் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜனாப் குடந்தை ஃபக்ருதீன் அலி அஹமத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். 

ஈகைப் பெருநாள் என்றால் என்ன? முஸ்லிம்கள் ஏன் பெருநாள் கொண்டாடுகின்றனர். அந்த நாளில் அவர்கள் செய்யும் பணிகள் என்ன என்பது குறித்து விளக்கினார். மேலும் நாடு தற்போது இருக்கும் சூழலில் பன்சமூகங்களுக்கு மத்தியிலான நல்லிணக்கம், சகோதரத்துவம், அன்பு இவைகளின் முக்கியத்துவத்தை குறித்தும் வலியுறுத்தினார். 

உரைக்கு பிறகு கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்வு நடந்தது. இறுதியாக வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து (பிரியாணி) பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வில் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து முஸ்லிமல்லாத 45 சகோதரர்கள் உட்பட சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். 

~ JIH & SIO அதிரை