News Channel

ரமலான் பெருநாள் தொழுகை

பெருநாள் திடல் தொழுகை

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் கிளை சார்பாக 
ஈதுல் பித்ரு பெருநாள் தொழுகை 
மஸ்ஜிதுல் ஹுதா பள்ளி 
வளாகத் திடலில் 
காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

மஸ்ஜிதுல் ஹுதா பள்ளி இமாம் 
அப்பாஸ் அலி அவர்கள் 
பெருநாள் தொழுகையை தலைமையேற்று நடத்தினர்.

பெருநாள் உரை உறுப்பினர் 
நஜீர் ஹுஸைன் அவர்கள் நிகழ்த்தினார்.
ரமலானின் நோக்கம், இறையச்சம்,மன்னிப்பு,
பெருமை,ஆணவம்,
போன்ற குணங்கள் எல்லாம் இல்லாமல் மிகச்சிறந்த மூமின்களாக இருக்க வேண்டும் அதுதான் ரமலான் நமக்கு உணர்த்தும் பாடம் என்ற வகையில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

600 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டார்கள். 

உலக அமைதிக்காகவும், 
பாலஸ்தீன மக்களுக்காகவும், 
அநீதி இழைக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் 
அனைவரும் பிரார்த்தனை புரிந்தார்கள். 

தொழுகையில் கலந்து கொண்ட அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக்  ரமலான் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பரிமாறி கொண்டார்கள்.