News Channel

சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

"சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி / விருந்து"

சகோதர சமுதாய மக்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி 
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு பகுதிகளிலும் சகோதர சமுதாய மக்களுடன் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் பல்வேறு ஊர்களில் சகோதர சமுதாய சொந்தங்களுடன் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றுள்ளது. அவ்வகையில்

மதுரை பகுதியில் 
* குராயூரில்
சகோதர சமுதாய சகோதரிகளுக்கான சமுக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி. 
சிறப்பு விருந்தினராக மதுரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் ஜரீனா யூசுப் கலந்து கொண்டார்கள்.

தேனி பகுதியில் 
* கோடாங்கி பட்டியில் 

இராமநாதபுரம் பகுதியில் 
* தீன் நகர் 
* மக்கா நகர் 

சிக்கல் பகுதியில் 
* ஓடை குளம் பகுதியில் 

சகோதர சமுதாய மக்களுக்கு இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மிக சிறப்பான முறையில் அந்நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியை அப்பகுதியில் உள்ள ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர்களும், ஊழியர்களும் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்து  கலந்துரையாடல் செய்தார்கள் கலந்துரையாடல் மூலம் கூறுகையில்..... 
ரமலான் என்பது வெறுமனே உண்ணாமல் இருப்பதை அடையாளப்படுத்துவது அல்ல 
* ஒரு மனிதனை பக்குவப்படுத்தக் கூடியது 
* ஒரு மனிதனிடமிருந்து தீய பழக்க வழக்கத்தை அகற்றிவிட்டு நல்ல பண்புகள் கொண்ட பழக்க வழக்கங்களை உருவாக்குவது 
* ஒரு மனிதன் வாழுகின்ற பொழுது என் நிலையிலும் இன்னொரு மனிதனுக்கு தீங்கிழைக்காமல் இருப்பதற்கான பயிற்சியும் 
* மற்றவருடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியும் 
* அனைவருடன் வாஞ்சையோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியும் 
* மனிதர்கள் மீது அன்பும் இரக்கமும் காட்டுவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுவது தான் ரமலான் மாதம் என்றும் 

இந்த ரமலான் மாதத்தை பற்றி நபிகள் நாயகம் அவர்கள் சொல்லுகின்ற பொழுது மனிதர்களே அருள் வளமிக்க மாதம் வர இருக்கிறது என்று தான் சொன்னார்கள் ஆக அந்த வகையில் எல்லோருக்குமே இந்த மாதத்திலே இறைவனுடைய அருள் இருக்கிறது இறைவனுடைய அருள் பெற வேண்டும் நாம் மதங்களாக மார்க்கமாக பிரிந்து இருந்தாலும் மனிதர்களின் அடிப்படையில் நாம் ஒன்றினைய வேண்டும். சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும். சமூக ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்கு இந்த நோன்பும் இந்த இஃப்தார் நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று கலந்துரையாடல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

வருகை புரிந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கு இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு நோன்பு கஞ்சி , பதார்த்தங்கள், பழங்கள் வழங்கப்பட்டு இறுதியாக அவர்களுக்கு விருந்தும் அளிக்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சி பிரார்த்தனையுடன் இனிதே நிறைவடைந்தது.