News Channel

இஃப்தார் நிகழ்ச்சி

இஃப்தார் நிகழ்ச்சிகள்

ஆண்டுதோறும் வரக்கூடிய ரமலான் மாதத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. 
அவ்வகையில் இந்த ஆண்டும் பல்வேறு ஊர்களில் இஃப்தார்  நிகழ்ச்சி நடைபெற்றது. 

இஃப்தார் நிகழ்ச்சியின் மூலமாக 
* முஸ்லிம் சமூகத்திற்கு நோன்பின் நோக்கத்தையும் 
* நோன்பின் மூலமாக பெறவேண்டிய இறையச்சத்தையும் 
* நோன்பு தனி மனிதனிடத்தில் எதிர்பார்க்கக் கூடிய விஷயங்களையும் 
* நோன்பு கூட்டு சமூகத்தின் மூலமாக எதிர்பார்க்கக் கூடிய செய்திகளையும்

இஃப்தார் நிகழ்வின் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. 
நோன்பு நோற்று அந்த மாதத்தை கடந்து செல்வது நோன்பின் நோக்கமல்ல !
நோன்பு என்பது சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அந்த சமுதாயம் இறையச்சம் உள்ள சமுதாயமாக வாழ வேண்டும். 
அதன் மூலமாக மனித குலத்திற்கு இஸ்லாத்தின் செய்திகளை அழகிய முறையிலே எடுத்துரைக்க வேண்டும். 
ஒரு தனி மனிதன் மீது இஸ்லாம் சுமத்தப்பட்ட கடமைகளை புரிய வைக்க வேண்டும். என்ற செய்திகளை தாங்கி இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அந்நிகழ்விற்கு வரக்கூடிய அனைவர்களுக்கும் இந்த செய்தியை சமர்ப்பிக்கப்படுகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டு 
* இராமநாதபுரம் பகுதியில் உள்ள ஊர்கள் 
* சிக்கல் பகுதியில் உள்ள ஊர்கள் 
* மதுரை பகுதியில் உள்ள ஊர்கள் 
* தேனி / விருதுநகர் பகுதியில் உள்ள ஊர்கள் 
  
இஃப்தார் நிகழ்ச்சியில் மக்களை ஒருங்கிணைந்து நோன்பின் நோக்கத்தையும் அதன் மாண்பையும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.