News Channel

கூட்டு ஸஹர்

கூட்டு ஷஹர் ஏற்பாடு 
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் கூட்டு ஷஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ் 
இந்த ஆண்டும் கூட்டு ஷஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மதுரை பகுதியில் 
* குராயூர்
* அணைக்கரைப்பட்டி 
* சொக்க நாதன் பட்டி 

ராமநாதபுரம் பகுதியில் 
* தீன் நகரில் 
* ஓடை குளம்
* மறவாய்குடி 
* முஹமதியாபுரம்

இன்னும் சில ஊர்களிலும் கூட்டு ஷஹர் நடைபெற்று வருகிறது.

இந்த 2025 ம் ஆண்டும் ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் கூட்டு ஷஹர் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்கள் ஷஹர் செய்து வருகின்றார்கள். ஷஹர் உணவு ஏற்பாட்டுக்கான நோக்கம் என்னவென்றால் ....
இன்று பல குடும்பங்களில் ஷஹர் உணவு செய்ய முடியாத சூழல் ஏற்படுகின்றது காரணம் 
* அந்த வீட்டில் நோன்பு நோற்பவர் ஒற்றை நபராக இருக்கலாம் 
* அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் ஷஹர் உணவு ஏற்பாடு செய்யப்படாமல் போகலாம் 
* பயணத்தில் இருந்து வரக்கூடிய நிலையிலே சகர் உணவு கிடைப்பதற்கு சிரமமாக இருக்கலாம் 

ஆக இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. எந்த ஒரு காரணத்தை காட்டியும் ஒரு நோன்பாளிக்கு உணவு கிடைக்காமல் இருந்து அதனால் அவர் நோன்பு நோற்காமல் விட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு பகுதிகளிலும் ஷஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அந்த அடிப்படையில் தீன்நகரில் தீன் நகர் ஜமாஅத் மூலமாக தொடர்ந்து இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் ஷஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இடம்: இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் - JIH