"சமூக நல்லிணக்க
இஃப்தார் நிகழ்ச்சி"
23/03/2025 ஞாயிற்றுக்கிழமை
ஆம்பூர் உமர்ரோடு, கோட்டை பங்களா வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய தகவல் மையத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பாக
சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் சுபைர் அஹமது தலைமை தாங்கினார்,
சமூக ஆர்வலர் அஹ்மது அலீ,
இன்ஜினியர் அமீனுர்ரஹ்மான்,
முத்தவல்லி சையது யாகூப்
முன்னிலை வகித்தனர்.
செயலாளர் அப்துஸ்ஸலாம் அனைவரையும் வரவேற்றார்,
உமர்ஆபாத் அரபிக் கல்லூரி பேராசிரியர் ஜமாலுதீன் உமரி,
சமத்துவம் சகோதரத்துவம் சமநீதி ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய நெறி,
தொழுகை நோன்பு ஜகாத்து ஹஜ் மூலமும் இன்னபிற வழிபாடுகளின் மூலமும் அதனை நடைமுறைப் படுத்தி வருகிறது.
மனிதநேயமும்
மத நல்லிணக்கமும்
குறைந்து,
வெறுப்பும் குரோதமும் பெருகிப் போய்,
மனிதகுலம் மாபெரும் துயரங்களை சந்தித்து வருகிற இன்றைய காலச்சூழலில்
இத்தகைய வாழ்வியல் நெறி அவசியமாகிறது.
அனைத்து சமயங்களும் நன்நெறியை போதிக்கின்றன.
இதுபோன்ற முயற்சிகள் மூலம் மனித சமூகத்தில் மனிதநேயம் நல்லிணக்கம் மென்மேலும் வளரும் என நம்ப முடியும்
என்று விளக்கினார்.
இதில்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் சி கே சுபாஷ்,
ஆர் ஞானசேகரன்,
கேஏஆர் பாலிடெக்னிக் முதல்வர் ராஜமன்னன்,
வழக்கறிஞர் பாபு,
இன்ஜினியர் வெங்கடேஷ்,
நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் விஜயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அனைத்து கட்சிப் பிரமுகர்கள்,
நகரப் பிரமுகர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள்,
சமூக ஆர்வலர்கள்,
பத்திரிக்கை நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக அனைவருக்கும் சமத்துவ சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது.
புகழனைத்தும்
இறைவனுக்கே.