News Channel

இளைஞர்களுக்கான ஈமானிய விருந்து – இஃப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்டது.

இளைஞர்களை ஒன்றிணைத்து இஸ்லாமியப் பணிகளுக்கான உத்வேகத்தை வழங்கிட சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி கோவை கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து ஞாயிறு (16 மார்ச் 2025) அன்று நடைபெற்றது.
 
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் உறுப்பினர் சகோ.யாசிர் அவர்கள் இறைவசனங்களை ஓதி நிகழ்வை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சாலிடாரிட்டி அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் முனைவர். அப்துல் ஹக்கீம் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். P.S.உமர் ஃபாரூக் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
 
இளைஞர்கள் இஸ்லாமியப் பணிகளை கூட்டமைப்பாக ஒருங்கிணைந்து செய்திட வேண்டிய அவசியத்தை ஆசிரியர். M. சலீம் அவர்கள் தெளிவாக எடுத்துரைத்தார். சாலிடாரிட்டி அமைப்பின் கோவை மாவட்ட செயலாளர் சகோ. சினுஜ் அவர்களின் நன்றியுரை, துஆ உடன் நிகழ்வு நிறைவு பெற்றது. நிகழ்வினை சகோ. அஜீஸ் அவர்கள் அழகுறத் தொகுத்து வழங்கினார்.
 
அதனைத் தொடர்ந்து இஃப்தார் விருந்து நடைபெற்றது. நிகழ்வில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.