News Channel

சமூக நல்லிணக்கம் போற்றும் நோன்பு கஞ்சி


சமூக நல்லிணக்கம் போற்றும் நோன்பு கஞ்சி 

சமூக நல்லிணக்கங்கள் பல பகுதிகள் சிறப்பாக இருக்கின்றன. சில பகுதிகள் சிதைந்து இருக்கின்றன. இதை அனுதினமும் நாம் பார்த்து வருகின்றோம் ஆனாலும் பல இடங்களில் சமூக நல்லிணக்கத்தையே பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றார்கள் அப்படியான நிகழ்வுகள் நடைபெறுகின்ற பொழுது மக்கள் மத்தியில் பெரும் ஆதரவும் ஒத்துழைப்பும் பிரார்த்தனையும் கிடைக்கின்றது. 
இதை உண்மைப்படுத்தும் விதமாக ரமலான் மாதங்களில் பல நிகழ்வுகள் சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்று வருவது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். 

ரமலான் மாதத்தில் 
* இப்தார் நிகழ்ச்சிகள் மூலமாக சமூக நல்லிணக்கத்தை நாம் பறைசாற்றுகின்றோம் 
* பெருநாளன்று வாழ்த்துக்களை தெரிவிப்பதன் மூலமாக சமூக நல்லிணக்கத்தை நாம் பறைசாற்றுகின்றோம்
* பல ஊர்களில் பள்ளிவாயலுக்கு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கான தொகையை கூட தொப்புள் கொடி உறவுகளான சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்கள் வழங்கி வருவதை சமூகத்தில் சமூக நல்லிணத்திற்கான முன்னெடுப்பாக இருந்து வருகின்றது. 

இப்படி ஒட்டுமொத்த மனித சமூகத்திலும் சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையிலும் அதை நிலைநாட்டும் வகையிலும் பல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. 

அதேபோன்றுதான் நம்முடைய பகுதிகளிலும் பல இடங்களில் அந்தந்த பகுதியில் வாழ் மக்கள் சமூக நல்லிணத்தை மதிக்கும் வகையில் அதற்கான ஆதரவு தெரிவிக்கும் வகையில் வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் நோன்பு கஞ்சி வாங்கி அருந்துவதை பார்க்கிறோம் ! 

ரமலான் மாதங்களில் முஸ்லிம்கள் அவருடைய விரதங்களை நோன்பை துறப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு உணவு நோன்பு கஞ்சி அந்த நோன்பு கஞ்சியை இன்றைக்கு சகோதர சமுதாயத்தவர்கள் காலம் தொண்று தொட்டு நோன்பு கஞ்சி வாங்கி நமக்கும் அவர்களுக்குமான சகோதரத்துவத்தை உறுதிப்படுத்த கூடிய காட்சி இன்றளவும் பல பகுதிகளில் நடைபெற்று வருவது மகிழ்ச்சியான விஷயம். 

அந்த வகையில் நமது
* குராயூர்
* அணைக்கரைப்பட்டி 
* வன்னி வயல் 
* கோடாங்கி பட்டி 

இப்படி 16 ஊர்களுக்கு  மேலாக பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.