பெண்கள் தினம் சிறப்பு நிகழ்ச்சி
ஆண்டுதோறும் வரக்கூடிய மார்ச் 8 ம் தேதி பெண்கள் தினத்தை போற்றும் வகையில் காண்டை சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மதுரை மாவட்டம் காண்டை பகுதியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் காண்டை ஜும்மா பள்ளிவாசல் இமாமான மௌலவி அப்துல் மாலிக் ஸலாமி அவர்களும், காண்டை பஞ்சாயத்து தலைவர்
தவமணி m.a, m.et அவர்களும் இணைந்து பெண்கள் தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் காண்டை முஸ்லீம் ஜமாத் தலைவர் அப்துல் மஜீத் அவர்களும் பங்கு எடுத்துக் கொண்டார்.
காண்டை பகுதியில் பெண்கள் மற்றும் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பணி செய்கின்ற தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கி புத்தகங்கள் பரிசாக கொடுக்கப்பட்டு பொன்னாடைகள் போற்றப்பட்டு கௌரவிக்கப்பட்டன.
பெண்கள் தினம் சிறப்பு நாளன்று பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றது அதில் பங்கு எடுத்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர்.
மேலும்,அந்நிகழ்வில் கலந்து கொண்ட மவுலவி, அப்துல் மாலிக் ஸலாமி அவர்கள் பெண்கள் தின சிறப்புக்கான நாளை நினைவு கூறும் வகையில் உரை நிகழ்த்தினார். அவர் உரையில் கூறுகையில் பெண்களை போற்றும் நாட்டில் நாம் வாழுகின்றோம், பெண்களை மதிக்கக்கூடிய பண்புகளை குழந்தையிலிருந்து நமக்கு புகட்டப்பட்டிருக்கிறது. அனைத்து பெண்களையும் தாய் ஸ்தானத்திலும் சகோதரிகள் ஸ்தானத்திலும் பார்ப்பதற்கு பெற்றோர்கள் நமக்கு பயிற்சி தரப்பட்டு இருக்கிறார்கள். ஆனாலும் சமீப காலமாக பெண்கள் மீது இளைக்கக் கூடிய கொடுமைகளையும் அவலங்களையும் பார்க்கும் பொழுது மனிதர்கள் மிருகங்களாக மாறுகின்றார்களா? அல்லது அவர்களுக்கு புகட்டப்பட்ட நல்லுரைகள் மறக்கடிக்கப்பட்டு இருக்கிறதா?
தற்போது உள்ள தலைமுறைக்கு முன்னால் இருந்த தலைமுறைகளுக்கு சொல்லப்பட்டது போல அவர்களுடைய குடும்பத்தார்கள் பெண்கள் மீது பார்க்கக் கூடிய பார்வைகளை கண்ணியமான பார்வையாக பார்க்க வேண்டும் என்று போதிக்கவில்லையா? என பெண்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய அநீதிகளின் கொடுமைகளையும் தங்களுடைய ஆதங்கங்களாக பதிவு செய்தார்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்தார்.
இடம்; காண்டை