News Channel

இஃப்தார் நிகழ்ச்சி

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த்
நீலகிரி மாவட்டம் சார்பாக, அல்லாஹ்வுடைய மாபெரும் கருணையினால் 
 12-03-2025  நோன்பு துறப்பு 
சிறப்பு நிகழ்ச்சி ஊட்டி YMCA , ஹாலில் மாலை 6:00 மணிக்கு நடைபெற்றது.

ஜனாப் ஹாஜா முஹைதீன் அவர்கள் திருமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சி ஆரம்பமானது
 சமரசம் பொறுப்பாசிரியர்
 ஜனாப் வி எஸ் முஹம்மது அமீன் அவர்கள் சிறப்புரையாற்றினார் நோன்பைப் பற்றிய பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளிக்க கூடியதாக அமைந்தது.

தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக ஜனாப் அஹமத் பிலால்  அவர்கள் நன்றி உரை வழங்கினார் இந்நிகழ்ச்சியை ஜனாப் முஹம்மத் பிலால் அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சகோதர சமுதாய மக்கள் 50 நபர்கள் கலந்து கொண்டனர். இரவு விருந்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சி உண்டான ஏற்பாடுகளை செய்த குன்னூர் மற்றும் ஊட்டி சகோதரரகள் அனைவருக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக....