"சமூக நல்லிணக்க இஃப்தார்"
நன்மைகள் பூத்துக் குலுங்கும் ரமலான் மாதத்தில்.
சகோதர சமய சகோதரர்களுடன் இணைந்து
நோன்பு துறக்கும் நிகழ்ச்சியை
மன்னார்குடி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொடர்ந்து பல வருடங்களாக நடத்திக் கொண்டு வருகிறது .
முன்பெல்லாம் மக்களை ஒரு இடத்திற்கு அழைத்து வந்து அங்கே நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது .
ஆனால் கடந்த வருடம் முதல் (மக்களோடு நாம்) என்ற பாணியில் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நோன்பு துறக்கும் நிகழ்ச்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்தியது
இந்த வருடமும்
அதே பாணியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மக்களோடு மக்களாக மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களுடன் நோன்பு துறந்து மக்களோடு கலந்து உரையாடி வருகிறது.
இதுவரை தொடர்ந்து நான்கு நிகழ்ச்சிகளை மன்னார்குடி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்தி உள்ளது.
மேலும் சில நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.