சமூக நல்லிணக்க
இஃப்தார் நிகழ்ச்சி:
09/03/2025 ஞாயிற்றுக்கிழமை குடியாத்தம் நகரில்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளையின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகரத் தலைவர் இக்பால் அஹ்மத் தலைமையேற்றார்,
ஆசிரியர் சையது அப்துல் காதிர் உமரி முன்னிலை வகித்தார்,
யாசிர் அரஃபாத் இறை மறை வசனங்களை வாசித்து துவக்கிவைத்தார்.
ஆசிரியர் நூருல்லாஹ் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நகர மன்றத் தலைவர் எஸ்.சௌந்தரராஜன்,
கவிஞர் பாரிவேந்தர்,
கல்வியாளர் மஹாராஜன்,
இந்து சமத்துவ கட்சியின் வேலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உமர்ஆபாத், ஜாமியா தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் எஸ்.ஜமாலுதீன் உமரி
சமூக நல்லிணக்கம் நாட்டின் அவசியம் என்றும் பன்மை சமூகத்தில் நாம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு பண்புடன் வாழவேண்டும் என்பதையும் வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
இறுதியாக பேராசிரியர் அப்துல் காதிர் நன்றியுரையாற்றினார்.
நிகழ்வில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள்:
என்ஜினீயர் D.சுனில்,
R M.அமானுல்லா,
நகர மன்ற உறுப்பினர்கள்:
கவிதா பாபு,
ஜாவித் பாய்
ஆசிரியர் மற்றும் பேராசிரியப் பெருமக்கள், நகரப் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைவருக்கும் சமத்துவ சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது.
புகழனைத்தும் இறைவனுக்கே.!