JIHமகளிரணி திருச்சி கிளை சார்பாக
காதலர் தினமும் கலாச்சார சீரழிவும் என்ற தலைப்பில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தர்கா, நூருல் ஹுதா பள்ளியில் 2முறை, வரகனேரி,வலிமா ஹால், ரிச் அவென்யூ, KMS மொய்தீன் பாய் வீடு, காட்டூர் 2 இடங்கள்,ரஹ்மானிய புரம் பள்ளி,கூனி பஜார் பெண்கள் மேம்பாட்டு மையம், அண்ணா நகர்,சின்ன சாமி நகர்,குத்பிஷா நகர் போன்ற 14 இடங்களில் நடைபெற்றது.
அழைப்பு கொடுக்கப்பட்ட நபர்கள் - 1545
பயன் அடைந்த நபர்கள் - 966
தாக்கங்கள்:
காதலர் தினம் என்ற அனாச்சாரங்களில் இருந்து நமது பிள்ளைகளை எப்படி மீட்டெடுப்பது என்பதை தெரிந்து கொண்டோம்.
நம் பிள்ளைகளுக்கு நாம் தான் முதலில் முன்மாதிரியாக இருக்க வேண்டும்
பிள்ளைகளுக்கு நேரம் கொடுக்க வேண்டும் அவர்கள் பேசுவதை கேட்க வேண்டும்
நாம் முதலில் செல்போனில் நேரத்தை செலவிடுவதை குறைக்க வேண்டும்
இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டு பிள்ளைகளுக்கும் நாம் சொல்லி கொடுக்க வேண்டும்
இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்த பட வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார்கள்.