ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி
இராமநாதபுரம் சிக்கல் பகுதி மதீனா நகரில் 25.2.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் துணை செயலாளருமான ஜனாப்; நஜீர் ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மதீனா நகர் ஜமாஅத் தலைவர் ஜனாப் முஸ்தபா அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
இந்நிகழ்ச்சியை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரும் மதீனா நகர் ஜும்மா பள்ளிவாசல் இமாமான ஆலிம், முஹம்மது ரபிக் தாஃவதி அவர்கள் ஏற்பாடு செய்து அழகுற வழி நடத்தினார்.
சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஜனாப் நஜீர் ஹுசைன் அவர்கள் ரமலானே வருக எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் அவர் உரையில் கூறுகையில்...
ஒவ்வொரு ஆண்டும் ரமலானே வருக நிகழ்ச்சி நடத்துவது ரமலானை குறித்து மக்களுக்கு நினைவூட்டுவதற்காக மட்டுமல்ல மேலும் ,ரமலானே வருக நிகழ்ச்சி என்பது மக்கள் கூடி களைய கூடிய ஒரு நிகழ்வு கிடையாது.
மாறாக இந்த ரமலானே வருகை நிகழ்ச்சி என்பது ஒரு சுன்னத் ஆகும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் வாழுகின்ற காலம் முழுவதும் ஷாபான் மாதத்தின் கடைசி நாட்களில் தங்கள் குடும்பத்தார்களை உறவுகளை சஹாபாக்களை சமூகத்தை நினைவு படுத்தினார்.
எப்படி? மனிதர்களே! இதோ அருள் வளமிக்க மகத்துவமிக்க மாதம் ஒன்று வர காத்திருக்கிறது நீங்கள் தயாராகிக் கொள்ளுங்கள் என்று.
அந்த அடிப்படையில் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. ஆகவே, இது ஒரு இபாதத். இது ஒரு சுன்னத் என்ற எண்ணத்துடன் நாம் இந்த நிகழ்ச்சியில் அமர வேண்டும்.
இந்த இபாதத்துக்கு தயாரானவர்களாக சுன்னத்தை ஹயாத் ஆக்க கூடியவர்களாக நாம் இருக்கிறோமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். காரணம், இந்த ரமலானின் மூலம் அல்லாஹுத்தஆலா தரக்கூடிய பரிசு என்பது இறை நம்பிக்கை கொண்டு வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படக்கூடிய சுவனம் அந்த சுவனத்தை பெறுவதற்கு உண்டான தகுதிகள் நம்மிடத்தில் இருக்கிறதா? அதற்குண்டான நற்காரியங்களில் நாம் ஈடுபடுகின்றோமா? இந்த ரமலானை நாம் முழுமையாக அதற்காக பயன்படுத்துகிறோமா? என்பதை நாம் சுய ஆய்வு செய்ய வேண்டும்.
காரணம், பல மனிதர்களுக்கு ரமலானை அடையக்கூடிய பாக்கியம் கிடைக்காத நிலையிலும் நமக்கு அல்லாஹ்வின் அருளால் இந்த ஆண்டு ரமலானை அடையக்கூடிய பாக்கியம் கிடைத்துள்ளது . இங்கு கூடிய மக்களுக்கும் கிடைத்திருக்கிறது என்றால் நாம் எவ்வளவு கவனமாக , ஆர்வமாக, முனைப்போடு இந்த ரமலானில் நாம் பயணிக்க வேண்டும்.
ரமலான் மூலமாக பெறக்கூடிய காரியங்கள் ஏராளம் ஏராளமாக இருக்கின்றன.
* தொழுதால் நாம் எண்ணிப் பார்க்காத நன்மைகள் கிடைக்கின்றது
* தர்மம் செய்தால் நினைத்துப் பார்க்காத அளவிற்கு நற்கூலி கிடைக்கிறது
* ஒருவருக்கு நோன்பு திறக்க உதவினால் நோன்பு நோற்றவருடைய கூலியை போன்று உதவியிருக்கும் கிடைக்கிறது
* ஏழை எளிய ஓரிடத்தில் அன்பாக நடந்தால் அல்லாஹுத்தஆலா நம் மீது அளப்பரிய அன்பு செலுத்துகின்றான்
* பாவங்களில் இருந்து மீண்டு இருந்தால் அல்லாஹுத்தஆலா பெருமை கொள்கின்றான்
* பசித்திருப்பதாலும் தாஹித்திருப்பதாலும் அல்லாஹுத்தஆலா திருப்தி அடைவது அல்ல அந்த நிலையில் இருந்து கொண்டு இறைவன் விரும்பக்கூடிய காரியங்களை நாம் செய்கின்ற பொழுது அல்லாஹ் மகிழ்ச்சி அடைகின்றான்.
அதே வேளையிலே நாம் நோன்பு நோற்றும் நாம் இரவிலே தொழுது கொண்டும் மற்ற மாதங்களில் செய்கின்ற கவனக் குறைவான செயல்பாடுகள் இந்த ரமலானிலும் இருந்தால் அல்லாஹுத்தஆலா எந்த விதமான நன்மையும் நமக்கு தருவதற்கு முன் வர மாட்டான் என்பதை புரிய வேண்டும்.
ஆகவே இந்த ரமலானை நாம் பயபக்தியோடு நன்மை எதிர்பார்த்து நற்கூலி பெறுகின்ற எண்ணத்தோடு அமல் செய்ய வேண்டும். இந்த ரமலானின் சிறப்பு என்னவென்றால் அல்லாஹ் மனிதன் செய்கின்ற எந்த ஒரு அமலும் அல்லாஹுத்தஆலாவின் விருப்பத்திற்குரியதாக இருந்தால் அதை பன்மடங்காக பெருக்கி நன்மை தருகின்றான்.
எடுத்துக்காட்டுக்காக; ஒன்றை பாருங்கள் இம்மாதத்திலே ஒரு
* நபில் தொழுதால் சுன்னத்திற்கான நன்மை கிடைக்கின்றது
* சுன்னத்தை நாம் நிறைவேற்றினால் பர்ளுக்குரிய நன்மை கிடைக்கிறது
* ஃபர்லை நிறைவேற்றினால் 70 ஃபர்லை நிறைவேற்றியதற்கான நன்மை கிடைக்கிறது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.
11 மாதங்களில் நாம் ஐவேளை தொழுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அந்த ஐவேளை தொழுகைக்கான கூலி ஒரு ஃபர்லின் நிறைவேற்றுகின்ற பொழுது ஒரு பர்ளுக்கு ஒரு நன்மை ஐந்து நேரத்தை நாம் 11 மாதங்கள் கணக்கிடுகின்ற பொழுது
11×30= 330
330×5= 1650 நன்மைகள்
ரமலானில்
30×5=150
150×70= 10,500 நன்மைகள்
ரமலான் ஒரு அமல் செய்கின்ற பொழுது எந்த அளவுக்கு இறைவன் அதிகப்படுத்தி தருகிறான் என்பதை கவனியுங்கள்.
அல்லாஹுத்தஆலா இந்த ரமலானை வழங்கி இதில் அமல் செய்து நம்மை பரிசுத்தவான ஆக்கி சொர்கத்துக்குரியவர்களா, மறுமையில் ரய்யான் என்று சொர்க்கத்திலே நுழைவிப்பதற்கும் ரமலான் மாதம் முழுவதும் நமக்கு ஆயத்தம் ஆக்கி தந்திருக்கிறான்.
அதனால் நாம் முழுமையாக ரமலானை அடைந்து அவன் தரக்கூடிய சுவனம் செல்லக்கூடிய பாக்கியத்தை அடைய வேண்டும். என்ற பல செய்திகளை அவருடைய உரையிலே மிக ஆழமான சிந்தனை தரக்கூடிய வகையில் எடுத்துரைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மதீனா நகர் ஜமாத்தார்கள் ஆண்களும் பெண்களும் இளைஞர் இளைஞிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
துஆ வுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இடம்: மதீனா நகர்