News Channel

ரமலானே வருக ! சிறப்பு நிகழ்ச்சி


ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி

 தேனி மாவட்டம் கோட்டூர் 24 .2 .2025 திங்கட்கிழமை மாலை 6:30 முதல் 8 மணி வரை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரும் கோடாங்கிபட்டி ஜும்மா பள்ளிவாசலின் இமாமான ஆலிம் அபூபக்கர் தாஃவதி அவர்கள் கலந்து கொண்டார். 

இந்நிகழ்ச்சிக்கு கோட்டூர் ஜமாத் தலைவர் ஜனாப்; ராஜா முஹம்மது அவர்கள் முன்னிலை வகித்தார். 

இந்நிகழ்ச்சியை கோட்டூர் ஜும்மா பள்ளிவாசல் இமாம் மவுலவி ஹபீபுல்லா யூஸுஃபி அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அழுகிற வழிநடத்தினார். 

சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஆலிம் அபூபக்கர் தாஃவதி அவர்கள் ரமலானே வருக என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் தங்களின் உரையில் கூறுகையில் ரமலானே வருக என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இந்த முஸ்லிம் சமூகத்திற்கு ரமலானை குறித்த நினைவூட்டுவது கிடையாது. மாறாக நினைவூட்டுவதும் நோக்கம் அல்ல மாறாக ரமலானில் நாம் எப்படியான அமல்கள் செய்ய வேண்டும் நாம் செய்யப்படக்கூடிய அமலுக்கான நற்கூலி என்ன? அந்த அமலை மனப்பூர்வமாக செய்யாத பொழுது அது எப்படியாக மாறிவிடுகின்றது. 
ரமலானை அடைந்தும் நற்பெயர் அற்றவர்களாக யார் மாறுவார்? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானை அடைந்து யாருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு நரகத்திலிருந்து விடுதலை பெறவில்லையே அவர் நாசமடையட்டும் என்று யாரை பார்த்து பத்வா செய்தார்கள்? அந்த பத்துவாவிற்கு ஆளாகாமல் நாம் எப்படி இருப்பது? போன்ற செய்திகளை புரிய வைப்பதற்கான நிகழ்ச்சி தான் இவை. 

நம்மளுடைய வாழ்வில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் வருகின்றது ரமலானில் நாம் நோன்பு நோற்கின்றோம் பெருநாள் கொண்டாடுகிறோம் அதோடு நாம்  ரமலானுக்கும் நமக்கான தொடர்பை துண்டித்து விடுகின்றோம். 

ரமலான் வெறுமனே நம்மை பசியாக வைத்து பெருநாளை கொண்டாட வைத்து செல்வதற்கு வரவில்லை .
மாறாக ரமலானில் எடுத்துக் கொள்ளக்கூடிய பயிற்சியை மற்ற 11 மாதங்களில் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ரமலான் மாதம் ஆண்டுதோறும் வந்தடைகின்றது. 

அப்படி என்ன நாம் பயிற்சி எடுக்க வேண்டும்? 
முதலில் நாம் நன்மைகளை செய்ய வேண்டும்
* ஐவேளை தொழுவது 
* ஏழைகளுக்கு தர்மம் செய்வது 
* ஃபர்லான நோன்புகளை நோற்பது 
* ஜக்காத் வழங்குவது 
* நபிலான தொழுகையை அதிகப்படுத்திக் கொள்வது 
* சுன்னத்தான காரியங்களில் அதிகமாக ஈடுபடுவது 

இப்படி இபாதத்துகள் சார்ந்த விஷயத்தில் நாம் அதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல தீமையான காரியங்களில் இருந்து விடுபட வேண்டும்
* பொய் பேசுவதில் இருந்து 
* புறம் பேசுவதில் இருந்து 
* அவதூறு பேசுவதில் இருந்து 
* அடுத்தவரை குறித்து தவறாக எண்ணுவதிலிருந்து 
* அடுத்தவர் பொருளாதாரத்தை திருடுவதில் இருந்து 
* அன்னிய பெண்ணை பார்ப்பதிலிருந்து 
* விபச்சாரத்தின் அடி சுவடுகளை கூட தொடாமல் இருந்து 

நம்மை தூய்மையாக ஆக்கிக் கொள்வதற்கான பயிற்சி வழங்குவது தான் இந்த ரமலான். 
இந்த மாதத்தில் நாம் எடுக்கின்ற பயிற்சி தான் இன்னபிற 11 மாதங்களில் சின்ன சிறு தவறை கூட செய்யாமல் இறைவனால் மெச்சக்கூடிய, பெருமை கொள்ளக்கூடிய, இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு முன்னோடியான முஸ்லிமாக வாழக்கூடிய பண்பாளராக நாம் மாற வேண்டும். 

நம்மை மாற்றுவதற்காக தான் ரமலான் ஆண்டுதோறும் வருகிறது என்பதை அவர் உரையில் அழகான முறையில் எடுத்துரைத்தார். 

கோட்டூர் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் 

துஆ வோடு இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இடம்; கோட்டூர்