ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி
இராமநாதபுரம் வன்னி வயல் 24 .2. 2025 திங்கட்கிழமை மாலை ஆறு முப்பது முதல் இரவு 8:30 மணி வரை நடைபெற்றது.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் மறவாய்குடி ஜூம்மா பள்ளிவாசலின் இமாமான ஆலிம் ஷேக் முகமது தாஃவதி அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு வன்னி வயல் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர்.
இந்நிகழ்ச்சியை வன்னி வயல் ஜும்மா பள்ளிவாசல் இமாம் மௌலவி , சாகுல் ஹமீது உலவி அவர்கள் ஏற்பாடு செய்து அழகுற வழிநடத்தினார்.
சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஆலிம் ஷேக் முகமது தாஃவதி அவர்கள் ரமலானே வருக என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்
ரமலானே வருக! இந்த நிகழ்ச்சி மூலமாக ரமலான் குறித்த செய்திகளை அறிந்து கொள்வதும் ரமலானை குறித்து புரிந்து கொள்வதும் என்பதை கடந்து வரக்கூடிய ரமலானை நாம் எப்படி வரவேற்கப் போகின்றோம், பயன்படுத்த போகின்றோம் என்பதை தெரியப்படுத்துவதற்கும் தெரிந்து கொள்வதற்குமான நிகழ்ச்சிதான் இது .
கடந்த ஆண்டு ரமலானில் நம்மோடு இருந்தவர் இந்த ரமலானே வருக நிகழ்ச்சியில் இருக்கவில்லை என்பது நமக்குத் தெரிகின்றது.
அப்படி சூழலில் அல்லாஹுத்தஆலா இந்த ஆண்டு ரமலானை அடையக்கூடிய பாக்கியத்தை நமக்கு நல்கி இருக்கிறான் என்றால் நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்பதை நாம் கருதி ரமலானில் செய்யக்கூடிய ஒவ்வொரு இபாதத்துகளையும்
* ஐவேளை
* தொழுகை
* நோன்பு
* ஸகாத் கடமையாக இருந்தால் ஜகாத்தை முறையாக வழங்குவது
* சதக்கா செய்வது
* ஃபித்ரா வழங்குவது
இன்னும் எதுவெல்லாம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு காட்டித் தந்திருக்கின்றார்களோ அவைகளை முறையாக முழுமையாக நாம் செயல்படுத்த வேண்டும்.
ஏனென்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எத்தனையோ நோன்பாளிகள் நற்பேரற்றவர்களாய் உள்ளனர் அவர்களுக்கு நோன்பின் வாயிலாக பசியும் தாகத்தையும் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை என்று ஹதீஸின் மூலமாக நமக்கு முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது.
நாம் வெறுமனே நோன்பு நோற்று இரவில் தராவிஹ் தொழுதால் மட்டுமே சுவனம் கிடைப்பது அல்ல, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டும் அல்ல!
நாம் ரமலானில் இஸ்லாம் சொல்லப்பட்ட அனைத்து அமல்களையும் அல்லாஹ்வினுடைய பொருத்தத்தை நாடி செய்கின்ற பொழுது தான் அது நற்கூலியாக மாறும் வெறுமனே சடங்கிற்காக நாம் தொழுதால் நோன்பு வைத்தால் இன்ன பிற அமல்கள் செய்தால் நபிகள் நாயகம் அவர்கள் கூறியது போல நற்பேரற்றவர்களாக மாறக்கூடிய சூழல் ஏற்பட்டு விடும் அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று இன்னும் பல செய்திகளை மிக அழகான முறையில் எடுத்துரைத்தார்.
இறுதியாக நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த வன்னி வயில் ஜமாத்தார்கள் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துஆ வுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தன.
இடம்: வன்னிவயல்