ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி
இராமநாதபுரம் சிக்கல் பகுதியில் உள்ள மறவாய்க்குடியில் 23 .2. 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 முதல் இரவு எட்டு முப்பது மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் துணை செயலாளருமான ஜனாப்; நஜீர் ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு மறவாய்குடி ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் மறவாய்க்குடி ஜூம்மா பள்ளிவாசலின் இமாமான ஆலிம் ஷேக் முகமது தாஃவதி அவர்கள் வழிநடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்துவதற்காக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரும் மதினா நகர் ஜும்மா பள்ளிவாசலின் இமாமான ஆலிம் முஹம்மது ரபிக் தாஃவதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஜனாப் நஜீர் ஹுசைன் அவர்கள் ரமலானே வருக! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில் ரமலான் மாதத்தில் நாம் பல அமல்கள் செய்கின்றோம் நற்காரியங்களில் ஈடுபடுகின்றோம். அப்படி ஈடுபடுகின்ற பொழுது நம்முடைய எண்ணம் எப்படி இருக்க வேண்டும் என்றால். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போல ஒருவன் இறை நம்பிக்கையுடனும் மறுமையில் நற்கூலியை பெறுகின்ற எண்ணத்துடனும்
* நாம் நோன்பு நோற்க வேண்டும்
* நாம் தொழுகையில் ஈடுபட வேண்டும்
* நாம் தர்மம் செய்ய வேண்டும்
* நாம் நன்மையான காரியங்களில் ஒவ்வொன்றாகும் இந்த எண்ணத்தோடு செய்கின்ற பொழுது
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அவர் முன் செய்த பாவங்களை மன்னிக்கப்பட்டவராக அல்லாஹுத்தஆலா அவரை ஆக்குகின்றான் என்று.
அல்லாஹ்வின் நல்லடியார்களே இது எவ்வளவு பெரிய பாக்கியம் பாருங்கள்! நாம் இந்த உலகத்தில் வாழுகின்ற பொழுது
பாவங்கள் மன்னிக்கப்பட்டவனாக மறுமையில் அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு இறை நம்பிக்கை கொண்ட ஆணும் பெண்ணும் ஆசைப்படுவார்கள். அதற்காகத்தான் நாம் வாழ்நாள் முழுவதும் தொழுகை மற்றும் நற்காரியங்களில் ஈடுபடுகின்றோம் மற்ற நாட்களிலே நம்முடைய தொழுகையும் நற்காரியங்களும் எந்த அளவுக்கு நன்மை கிடைக்கிறது என்பதை நாம் செய்கின்ற செயலை வைத்து அது உறுதி செய்யப்படுகிறது.
அதை அல்லாஹுத்தஆலா அப்படியேதான் கணக்கிலும் எடுத்துக் கொள்வான். ஆனால்! பெரும் பாக்கியம் என்னவென்றால்
* ரமலானை ஒரு மனிதன் அடைந்து
* ரமலானிலே நன்மைகளை எதிர்பார்த்தவனாக
* மன்னிப்பை எதிர்பார்த்தவனாக
* நற்கூலிய எதிர்பார்த்தவனாக
* அல்லாஹ்வினுடைய அருளை எதிர்பார்த்தவனாக
இந்த மாதத்தில் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹுத்தஆலா கணக்கில் இல்லாத நன்மைகளை வழங்குகின்றான். நம்முடைய பாவங்களை மன்னிக்கின்றான். நம்மை இறைவன் பொருந்தி கொள்கிறான்.
இந்த செய்தி எல்லாம் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி தருகின்றது. நம்முடைய வாழ்வில் இப்பொழுது ரமலானை அடையக்கூடிய பாக்கியத்தை அல்லாஹுத்தஆலா வழங்கியிருக்கின்றான். இந்த காலத்தில் நாம் இதை இழந்து விடக்கூடாது. நாம் முழுமையாக நன்மைகளை எதிர்பார்த்தவர்களாக. நாம் அமல்கள் செய்ய வேண்டும் என்று அவர் உரையிலே மிக அழகிய முறையில் அவர் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் மறவாய் குடி ஜமாத்தார்கள் ஆண்கள் பெண்கள் மாணவ மாணவிகள் என்று பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
வருகை புரிந்த அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சி துஆ வுடன் இனிதே நிறைவடைந்தன.
இடம் : மறவாய்க்குடி