ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் சொக்க நாதன் பட்டியில் 23.2.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு முப்பது முதல் எட்டு முப்பது மணி வரை நடைபெற்றது.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் இராமநாதபுரம் மாவட்டம் ஓடைக்குளம் ஜும்மா பள்ளிவாசலின் இமாமான மௌலவி ஆதம் அலி ஃபைஜி அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சொக்கநாதன் பட்டி தலைவர் அவர்கள் தலைமையேற்று நடத்திக் கொடுத்தார், ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் சொக்கநாதன் பட்டி ஜும்மா பள்ளிவாசலின் இமாமான ஆலிம் ஷாஜஹான் தாஃவதி அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அழகுற வழி நடத்தினார்.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மௌலவி ஆதம் அலி ஃபைஜி அவர்கள் ரமலானே வருக என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அவர் கூறுகையில் அல்லாஹுத்தஆலா மனிதர்களுக்கு பல அருள் வளங்களை வழங்கி இருக்கின்றான். அதை மனிதர்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹுத்தஆலா மனிதர்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய அருள் வளங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்தது இந்த ரமலான் மாதம்! இந்த ரமலான் மாதத்தை ஒருவர் முறையாக அடைந்து அதில் இபாதத் செய்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நற்காரியங்கள் செய்தால் அல்லாஹுத்தஆலா அந்த மனிதன் எண்ணிப் பார்க்காத அளவிற்கு நன்மைகளை வாரி வழங்குகின்றான்.
காரணம்! ரமலான் மாதம் என்பது நன்மைகள் பூத்துக் குலுங்க கூடிய மாதமாக இருக்கின்றது ரமலான் மாதத்தில் நாம் ஒரு சின்ன ஒரு அமல்கள் செய்தாலும் நாம் எதிர்பார்க்காத அளவுக்கு பெரும் நற்கூலி கிடைக்கின்றது.
நாம் ஒரு நபருக்கு தர்மம் செய்கின்ற பொழுது அந்த தர்மத்தின் தொகை சிறியதாக இருந்தாலும் அல்லாஹ் நாடினால் ஒன்றுக்கு பத்து அல்ல 70 அல்ல 700 வரை நன்மைகளை அல்லாஹுத்தஆலா பெருக்கி தருவதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த சமுதாயத்திற்கு கூறி இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட மாதத்தை அடைந்திருக்கக்கூடிய நாம் இந்த மாதத்தில் எந்தவிதமான நன்மைகளையும் செய்யாமல் இருந்துவிட்டு நம்முடைய ஆயுள் காலத்தை கழித்து விடக்கூடாது. அடைந்திருக்கக்கூடிய நாம் ஒவ்வொரு நற்காரியங்களையும் அறிந்தும் தெரிந்தும் அதன் மூலமாக அல்லாஹ் தஆலா தரக்கூடிய வெகுமதியை பெறக்கூடிய பாக்கியத்தை நாம் பெற வேண்டும் என்று அவர் உரையிலே மிக அழகிய முறையில் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சிக்கு சொக்கநாதன் பட்டியில் உள்ள ஜமாத்தார்கள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி துஆவுடன் இனிதே நிறைவடைந்தது
இடம்: சொக்க நாதன் பட்டி