News Channel

ரமலானே வருக ! சிறப்பு நிகழ்ச்சி


ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி 

இராமநாதபுரம் ரமலான் நகரில் 22.2.2025 சனிக்கிழமை மாலை ஆறு முப்பது முதல் எட்டு முப்பது மணி வரை நடைபெற்றது. 
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஜமாத்ங இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் செயலாளருமான மௌலவி முஹையீதீன் குட்டி உமரி அவர்களும் 
மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச் செயலாளருமான ஜனாப் நஜீர் ஹுசைன் அவர்களும் 
மற்றும் ராமநாதபுரம் ஜமாத்துல் உலமா சபை வட்டார தலைவர் மௌலவி முஹம்மது ரபீக் உலவி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மௌலவி முஹைதீன் குட்டி உமரி  அவர்கள் தங்களுடைய உரையிலே கூறுகையில்... 
ரமலானே வருக நிகழ்ச்சி என்பது ஒரு  நினைவூட்டல். எப்படியான நினைவூட்டல் என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் வருகின்ற பொழுது தங்கள் குடும்பத்தையும் உறவுகளையும் சமூகத்தையும் நினைவூட்டி தயார்படுத்தினார்கள். அருளவலமிக்க, மகத்துவமிக்க மாதம் வர இருக்கின்ற நிலையில் இந்த மாதத்தை யாரும் தவற விட்டு விடக்கூடாது. 
இம்மாதத்தில் இருக்கின்ற அனைத்து இபாதத்துகளையும் செய்து இறைவனிடத்தில் கூலியை பெற வேண்டும் என்று கூறினார் .
மேலும், கூறுகையில் இஸ்லாமிய சமூகம் செய்கின்ற ஒரு தவறு அல்லது மறதி என்னவென்றால் ? ஒரு மாத காலம் நோன்பு இருந்து பெருநாள் பிறை தென்பட்ட உடனே மக்கள் எல்லாம் பள்ளியை விட்டும் கடைவீதிக்கு ஓடி செல்கின்றார்கள். கைசேதம்! அன்று இரவு தான் ஒரு மாத காலம் நோன்பு இருந்தவர்களுக்கான கூலி தரப்படுகின்றது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். ஒரு மாத காலம் நோன்பு நோற்று கூலியை பெறக்கூடிய சிந்தனையே இல்லாமல் மக்கள் பெருநாளுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்காக பள்ளியில் அமர்ந்து அல்லாஹ்விடத்தில் கூலியை பெற்று செல்லாமல் விரண்டோடுவதை பார்க்கின்ற பொழுது கை சேதம், மக்களுடைய பரிதாப நிலை நமக்குத் தெரிகிறது. 
ஆகவே இந்த ஆண்டு அப்படியான நிலை வந்து விடக்கூடாது 
* நாம் 30 நாள் நோன்புகள் நோற்று 
* அந்த இரவில் நாம் அல்லாஹ்விடத்தில் கூலியை பெற்று 
* பாவமன்னிப்பை பெற்று 
* அவனை அருளை பெற்று 
* விடிய காலையில் பெருநாள் கொண்டாட கூடிய மக்களாக இருக்க வேண்டும். 

என்று அவர் உரையில் குறிப்பிட்டார். 

இராமநாதபுரம் ஜமாத்துல் உலமா சபை வட்டார தலைவர் மௌலவி முஹம்மது ரபீக் உலவி அவர்கள் தங்களுடைய உரையில் கூறுகின்ற பொழுது ரமலான் என்றாலே அது குர்ஆனோடு அதிகமான தொடர்புடையது. ரமலானில் நாம் அதிக அதிகமாக குர்ஆனை ஓத வேண்டும். பொருள் உணர்ந்து ஓத வேண்டும். ஓதுகின்ற வசனத்தை நம்முடைய வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். 
எந்த அளவுக்கு என்றால் நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கின்ற பொழுது நாம் ஓதுகின்ற இந்த குர்ஆன் நமக்கான பரிந்துரையாக மாற வேண்டும் என்று அவர் தங்களுடைய உரையில் கூறினார். 

சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த விருந்தினர்களுக்கு பொன்னாடை போற்றி ஜமாத்தின் சார்பாக கௌரவிக்கப்பட்டது. 

ரமலான் நகர் ஜமாத்தார்கள் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளைஞர்கள், சங்கத்தார்கள் என 250 க்கும் மேற்பட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டார்கள். 

இறுதியாக துஆ வுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

இடம்: ரமலான் நகர் - இராமநாதபுரம்