இல்லம் தோறும் திருக்குர்ஆன்
இல்லந் தோறும் திருக்குர்ஆன் சிறப்பு நிகழ்ச்சி இராமநாதபுரம் மக்கா நகரில் 22 2.2025 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6:30 மணி வரை நடைபெற்றது.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளரும் மதுரை இஸ்லாமிய சென்டர் செயலாளருமான மௌலவி முஹையீதீன் குட்டி உமரி அவர்களும்
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச் செயலாளருமான ஜனாப் நஜீர் ஹுசைன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நோக்கம் ஒவ்வொரு வீட்டிலும் இறைவேதமான திருக்குர்ஆன் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் திருக்குரான் இல்லாத வீடுகளில் திருக்குர்ஆன் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில் ராமநாதபுரம் மக்கா நகரில் உள்ள 42 குடும்பத்திற்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வழங்குவது என முடிவு செய்து IFT குர்ஆனை 22.2.2025 சனிக்கிழமை மாலை இல்லம் தோறும் திருக்குர்ஆன் எனும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அனைவருக்கும் குர்ஆன் வழங்கப்பட்டது.
நடைபெற்றது சிறப்பு நிகழ்ச்சிக்கு விருந்தினராக வருகை புரிந்த மௌலவி முகைதீன் குட்டி உமரி அவர்கள் தங்கள் உரையில் கூறுகையில் குர்ஆன் தான் மனிதனை மனிதனாக வாழ வைக்கக்கூடிய வழிகாட்டி.
குர்ஆன் தான் இறைவனோடு நம்மை நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாதனம். அதிலும் ரமலான் மாதம் வர இருக்கின்ற இந்த நேரத்தில் திருக்குர்ஆனோடு ஒவ்வொரு முஸ்லிமும் தங்களை அதிகமான தொடர்பு வைத்துக்கொண்டு அதன் கருத்துகளை உள்வாங்கி வாழ்வில் மிளிர வேண்டும். குர்ஆனோடு இருக்கும் காலமெல்லாம் எந்த ஒரு மனிதனும் வழி தவற மாட்டான் ஆகையால் குர்ஆனோடு நாம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் இறை நினைவோடு வாழ வேண்டும் அதற்கு இந்த ரமலானை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்தித் தந்த ஜனாப் நஜீர் ஹுசைன் அவர்கள் தங்கள் தலைமையுரையில் இவ்வாறு கூறினார்... முஸ்லிமுடைய வாழ்வில் இறைவனை நெருங்கிக் கொள்ளக்கூடிய பல அமல்கள் நமக்கு இருக்கின்றன
* தொழுகையின் மூலமாக நாம் இறைவனின் நெருங்குகின்றோம்
* நோன்பின் மூலமாக நாம் இறைவனின் நெருங்குகின்றோம்
* நாம் இந்த உலகில் செய்யக்கூடிய ஒவ்வொரு நற்காரியங்கள் மூலமாக இறைவன் நெருங்கின்றோம்
* ஆனால் இறைவனோடு பேசக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றால் அது குர்ஆன் தான்
குர்ஆனை படிக்கின்ற பொழுது நாம் இறைவனோடு பேசிகின்றோம். குர்ஆன் மூலமாக இறைவனும் நம்மோடு பேசுகின்றான். இது எவ்வளவு பெரிய பாக்கியம் இந்த பாக்கியத்தை எந்த ஒரு முஸ்லிமும் இழந்து விடக்கூடாது என்பதற்காக குர்ஆன் இல்லாத ஒவ்வொரு இல்லத்தையும் கண்டறிந்து அந்த இல்லத்தில் குர்ஆனை கொண்டு போய் சேர்க்கக்கூடிய பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். அப்படியான இந்த வாய்ப்பை இப்பொழுது இந்த மக்கா நகரிலும் இறைவனுடைய வேதமான திருக்குர்ஆனை கொண்டு சேர்ப்பதில், அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹுத்தஆலாவுக்கு எல்லா புகழும் புகழ்ச்சியும். இந்த வாய்ப்பை எங்களுக்கு கொடுத்திருக்கின்றான்.
ஆகவே இதை பெற்று நீங்கள் அதன் கருத்தை உள்வாங்கி இறைவன் விரும்பக்கூடிய மனிதனாக வாழ்ந்து இறைவன் விரும்பும் சமூகத்தை கட்டமைப்பதற்கு வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக என்று பிரார்த்தனையோடு அவருடைய உரையை முடித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு மக்கா நகர் ஜமாத் தலைவர் முன்னிலை வகித்தார் நிர்வாகிகளை கலந்து கொண்டனர் உள்ளூரில் உள்ள 42 குடும்பங்களும் திருக்குர்ஆனை பெற்றனர்.
நிறைவாக துஆவுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
இடம்: மக்கா நகர் - இராமநாதபுரம்