ரமலானே வருக ! சிறப்பு நிகழ்ச்சி
இராமநாதபுரம் மக்கா நகரில் 19.2. 2025 சனிக்கிழமை மாலை 6:30 முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரும் மதினா நகர் ஜும்மா பள்ளிவாசல் இமாமான ஆலிம் முஹம்மது ரஃபீக் தாஃவதி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு மக்கா நகர் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியை மக்கா நகர் ஜூம்மா பள்ளிவாசலின் இமாமும் ஜமாத்க இஸ்லாமி ஹிந்த் ஊழியருமான ஆலிம் முஹம்மது ஜாபர் அவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அழகுற வழி நடத்தினார்.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஆலிம் முஹம்மது ரபீக் தாஃவதி அவர்கள் ரமலானே வருக! என்ற தலைப்பிலே உரை நிகழ்த்தினார் அவர் தன் உரையிலே கூறுகின்ற போது ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் வருவதும் நாம் அதை கடைபிடிப்பது என்பது சடங்கிற்காக இருக்கக் கூடாது. அது சடங்கிற்காக நம்மிடத்தில் வரவும் இல்லை!
நாம் ரமலானை எப்படி அணுக வேண்டும் என்றால் அந்த மாதத்தில் நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய பயிற்சி என்பது மற்ற மாதங்களில் நம் வாழ்வில் அது பிரதிபலிக்க வேண்டும்
ரமலான் என்பது ஒவ்வொரு தனி மனிதனும் நோன்பு நோற்றாலும் கூட அது தனி மனிதனுக்கான இபாதத்துகள் நிறைந்து இருந்தாலும் கூட சமூக மாற்றமும் சமூக ஒற்றுமையையும் சமூகம் முன்னேற்றத்திற்கும் வித்தாக அது அமைந்திருக்கிறது.
* ஒவ்வொரு நாளும் தொழுகையில் நாம் ஒன்று கூடுகின்ற பொழுது அதே சிந்தனை தான் இருக்க வேண்டும்
* நம்முடைய சமூகத்தினுடைய வளர்ச்சியை
* ஒற்றுமையை பறைசாற்ற வேண்டும்
* இதற்கான பயிற்சியாக தான் ரமலான் மாதம் வருகிறது
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படித்தானே மக்களை அழைத்தார்கள் மக்களே! இதோ அருள் வளமிக்க மகத்துவமிக்க மாதம் ஒன்று உங்களை வந்து அடைய காத்திருக்கிறது நீங்கள் தயாராகிக் கொள்ளுங்கள்!
ஏனெனில் , அந்த மாதத்தில்
* நாம் பல நன்மைகள் செய்ய வேண்டும்
* நம்முடைய மனங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்
* நமது செயல்பாடுகளில் இறைவனுக்கு பிடித்ததாக அமைத்துக் கொள்ள வேண்டும்
* ஏழை எளியோருக்கு உதவி செய்ய வேண்டும்
* அண்டை வீட்டாரோடு அன்பாக நடந்து கொள்ள வேண்டும்
* உறவுகளை பேண வேண்டும்
* தேவை உடையோருக்கு உதவி செய்ய வேண்டும்
* அதோடு நம்முடைய மறுமைக்காக நாம் தொழுகையில் ஈடுபட வேண்டும்
* நோன்பு நோற்க வேண்டும்
* ஜகாத் வழங்க வேண்டும்
இப்படி தனிமனித செயல்பாடாக இருந்தாலும் அது சமூகத்தினுடைய மாற்றமாக இருக்க வேண்டும் உங்கள் பகுதிகள் முன்னேற்றம் வர வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஒன்று கூடி அதற்கான முயற்சிகள் எடுக்கும் போது தான் அந்த மாற்றங்கள் வெளிவரும், மாற்றங்கள் நடைபெறும்.
நாம் மாறாத வரை, நம் எண்ணத்தில் அந்த எண்ணம் உதிக்காத வரை எந்த வகையான மாற்றங்களும் தனிப்பட்ட ரீதியிலும் வராது, சமூக ரீதியாக வராது
ஆக ரமலானில் நாம் செய்கின்ற அமல்கள் என்பது அது நமக்காகவும் சமூகத்துக்காகவும் சமுக முன்னேற்றத்திற்குரிய செயலாக மாற வேண்டும். என்று இன்னும் உரைகளிலே நோன்பு காலங்களில் இருக்கக்கூடிய செயல்பாட்டின் விளைவாக பெறக்கூடிய நன்மைகளை அவர்கள் தொடர்ந்து பட்டியலிட்டார். நோன்பாளி நோன்பு வைத்துக்கொண்டு எப்படி வாழ வேண்டும் என்ற போன்ற செய்திகளை மிக அழக எடுத்துரைத்தார்கள்.
மக்கா நகர் ஜமாத் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
துஆ வுடன் இனிதே நிறைவடைந்தது.
இடம்: மக்கா நகர் - இராமநாதபுரம்