News Channel

ரமலானே வருக !


ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி 

இராமநாதபுரம் தீன் நகரில் 19 .2 .2025 புதன்கிழமை மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் செயலாளருமான மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்களும் மேலும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச் செயலாளருமான ஜனாப்: நஜீர் ஹுஸைன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.  
நிகழ்ச்சிக்கு சிறப்புரையாற்றிய மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்கள் ரமலானே வருக தலைப்பில் ஆழிய உரை நிகழ்த்தினார் அவர் உரையில் கூறுகையில்... ரமலான் மாதத்தின் சிறப்பே குர்ஆன் தான்! இந்த மாதத்தில் குர்ஆன் இறக்கி அருளப்பட்டதின் விளைவாக அல்லாஹ் சுபஹானஹூதஆலா இந்த மாதத்தை சிறப்பாக்கி வைத்திருக்கிறான். உலகம் துவங்கப்பட்ட காலம் முதல் ஒரு ஆண்டின் மாத எண்ணிக்கை 12 அந்த 12ல் இந்த ரமலான் மாதம் சிறப்பு அடைந்ததின் காரணம் குர்ஆன் இறக்கி அருளப்பட்டது. 

இந்த மாதத்தில் முஸ்லிம்களாகிய மக்கள் குர்ஆனோடு நெருங்கிய தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மற்ற காலங்களில் குர்ஆனுக்கும் மக்களுக்கும் இடைவெளி அதிகமாக இருக்கிறது அந்த நிலை இந்த ரமலான் மாதத்தில் வந்து விடக்கூடாது ஏனென்றால் குர்ஆனுடைய மகத்துவம் குர்ஆனோடு தொடர்பு வைக்கக்கூடிய மக்களுக்கு கிடைக்கக்கூடிய பர்க்கத், அருள் என்னவென்றால் ? யார் குர்ஆனோடு அதிகமாக இந்த மாதத்தில் தொடர் வைத்திருக்கிறாரோ நாளை மறுமையில் அல்லாஹ் சுபஹானஹூதஆலா இடத்தில் குர்ஆன் பரிந்துரை செய்யும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். 
குர்ஆன் செய்யும் பரிந்துரை பாருங்கள்... 
"யா அல்லாஹ்! நாளை மறுமையில் இவருடைய கணக்கை நீ எழுதுகின்ற பொழுது என்னுடைய பரிந்துரையை நீ ஏற்றுக் கொள்வாயா! ஏனென்றால் ரமலான் காலத்தில் குர்ஆனோடு இவர் அதிகமாக தொடர்பு இருந்தார் என்று குர்ஆன் மனிதனுக்காக பரிந்துரை செய்யும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு சொன்னார்கள் . அது மட்டுமல்ல இந்த மாதத்தில் பல அமல்கள் அருளாக மனித சமூகத்திற்கு வந்திருக்கிறது 
* தொழுகையும் சரி 
* தர்மங்கள் 
* நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்கக்கூடிய உதவிகள் 
* ஏழை எளியவர் மீது காட்டக்கூடிய கருணை 
* திக்ர் 
* துஆ
* தராவீஹ் தொழுகை 

இப்படி ரமலான் மாதத்தில் இருக்கக்கூடிய அனைத்துமே அருளாக மாறி ஒரு அடியானை சுவனத்துக்குரியவனாக மாற்றுகிறது ஆகவே இந்த ரமலானை நாம் முழுமையாக திட்டமிட்டு நாம் பயன்படுத்த வேண்டும். அல்லாஹுத்தஆலா இந்த மனித சமூகத்திற்கு வைத்திருக்கக் கூடிய அருளிலே மற்றொன்று 
* லைலத்துல் கதிர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாக அது இருக்கிறது .

அதை அடையக்கூடிய பாக்கியத்தை நாம் பெற வேண்டும். என்று அவருடைய உரையில் பல செய்திகளை எடுத்துரைத்தார்கள். 

இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று தலைமை உரையாற்றி ஆற்றினார் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளரும் மதுரை இஸ்லாமிய சென்று துணைச் செயலாளருமான 
ஜனாப்; நஜீர் ஹுசைன் அவர்கள்.

தலைமையுரையில் அவர் கூறுகையில்.. ரமலானே வருக! நிகழ்ச்சி நடத்துவதின் நோக்கம் இந்த நிகழ்ச்சி நடத்துவதினால் தான் இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு ரமலானை நினைவூட்டுவது அல்ல மாறாக கடந்த ஆண்டில் நம்மோடு பயணித்தவர்கள் இந்த ஆண்டில் இல்லை இந்த ஆண்டில் ரமலானின் பயணிக்க கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கி இருக்கிறான் அந்த பாக்கியத்தை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சி வெறுமனே நினைவூட்டுவது அல்ல 
* நாம் ரமலானில் எப்படியான அமல்களை செய்ய வேண்டும் 
* ஏன் செய்ய வேண்டும் 
* அதற்கான கூலி என்ன 

என்பதை அவருடைய தலைமை உரையில் சுட்டிக்காட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் தீன் நகர் ஜமாத் தலைவர் ஜனாப்: ஹைதர் அலி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

தீன் நகர் முஸ்லிம் ஜமாத் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் , இளைஞிகள், மாணவ- மாணவிகள் என 200 மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு துஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இடம் : தீன் நகர் - இராமநாதபுரம்