News Channel

ரமளானே வருக சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும். ஓசூர் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் ரமளானே வருக சிறப்பு நிகழ்ச்சி நேற்று 21.2.25 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 
மௌலானா முஹம்மது சிராஜ் நத்வி அவர்கள் குர்ஆன் கிராஅத் ஓதினார். அதை முஹம்மது ஆரிப் தமிழாக்கம் செய்தார்.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஜாஹிர் உசேன் வரவேற்றார். 
ஓசூர் நகர பொறுப்பாளர் முஹம்மது ஆரிப் தலைமை ஏற்று நடத்தினார். 

மௌலவி இஸ்மாயில் பலாஹி அவர்கள் வட்டி என்ற சமூகத் தீமை தீர ஜகாத் அவசியம் என்பதை உணர்த்தினார். 
அடுத்து சிறப்புரை ஆற்றிய டாக்டர் முஹையுதீன் அவர்கள் ரமளான் மாதம் ஏன் சிறப்பு வாய்ந்தது என்று கேள்வி எழுப்பி அதை இறையச்சம் என்ற புள்ளியில் இணைத்து இந்த இறையச்சம் ரமளான் மாதத்தில் மட்டும் தானா என்று கேள்வி எழுப்பி அனைவரையும் சிந்திக்க வைத்தார். மேலும் இந்த ரமளான் மாதம் அனைவரும் குர்ஆனில் உள்ள இறையச்சம் தொடர்பான வசனங்களை தொகுத்து ஆய்வு செய்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

முஹம்மது ஆரிப் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் என சுமார் 80 பேர் கலந்து கொண்டனர்.